ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா .?

பணத்தில் காந்தி படம் வருவதற்கு காரணம் என்ன?

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்தவர் மகாத்மா காந்தி. நமக்கு காந்தியை பற்றி தெரியாத விஷயங்கள் என்றால் ஏராளமாக உள்ளது. இவர் அக்டோபர் திங்கள் 2-ஆம் நாள் போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்தார். தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13 ஆம் வயதில் தம்மை விட வயதில் பெரியவராகிய கஸ்தூரிபாயை மணந்தார். காந்தியை பற்றி தெரிந்ததை கேட்டால் அவரை பற்றி அதிகளவு தெரியவாய்ப்புகள் இல்லை.

அப்படி இருக்கும்பட்சத்தில் நாம் அவரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. அந்த வகையில் இன்று அனைவரின்  அன்றாட வாழ்விற்கு முக்கிய பங்கு வகிக்கிறது பணம். அந்த பணம் இல்லாவிட்டால் இந்த காலத்தில் பிணம் கூட மதிக்காது என்பது போல் ஆகிவிட்டது. பணம் என்றால் சின்ன குழந்தைக்கு கூட தெரியும். “ பணம் பத்தும் செய்யும் “ என்பது பழமொழி. பழமொழியில் கூறப்பட்டு உள்ளதுதான் உண்மை. மகாத்மா காந்தியின் புகை படம் ரூபாய் நோட்டுகளில் இடம்பெறுவதற்கான காரணம் என்ன? அதற்கு முன் வேறு யாருடைய புகைப்படம் இடம் பெற்றது என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்..!

மகாத்மா காந்தி பிறந்த ஊர் எது?

காந்தியின் தத்துவங்கள்:

காந்தி இந்தியாவின் தேச தந்தை என்று பாராட்டப்படும் விடுதலை போராட்ட வீரர். காந்தியை இந்தியாவின் தியாகி என்றும் கூறலாம். விடுதலைக்காக நாடு முழுவதும் போராட்டம், சண்டைகள், எதிர்ப்புகள் இருந்த போதிலும் அகிம்சை முறையில் விடுதலைக்காக பெரும்பாடுபட்டவர். காந்தி சொல்லிய ஒவ்வொரு தத்துவங்களும் உண்மையை உணர்த்தும் நோக்கில் இருந்தது. அவர்கூறிய ஒரு தத்துவத்தை பார்ப்போம் வாங்க..!

“மகிழ்ச்சி உன் எண்ணத்தில் இருக்கிறது,

உன் வார்த்தைகளில் இருக்கிறது .

நீ செய்யும்  நல்லிணக்கத்தில் இருக்கிறது”

ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படம்:

ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படம்

நமக்கு தெரிந்த வரையில் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்தை மட்டும் தான் பார்த்து வருகிறோம். நிறைய தேச தலைவர்கள் இருப்பினும் காந்தியின் படத்தை மட்டும் ரூபாய் நோட்டுகளில் அச்சு இடுவது ஏன்?. இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க.

இந்திய ரூபாய் நோட்டுகள்:

வங்கி தாளில் 1969-ல் மகாத்மா காந்தியின் நூறாவது பிறந்தநாளை நினைவூட்டும் வகையில் அவரது புகைப்படத்துடன் கூடிய 1 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி முதலில் அறிமுகப்படுத்தியது.

அதன் பிறகு 18 ஆண்டுகளுக்கு பிறகு 1987-ல் மகாத்மா காந்தியின் உருவ படத்துடன் கூடிய 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தபட்டன.

1996-ல் காந்தியின் புகை படத்துடன் கூடிய 10 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வெளிவந்தன. அதன் பிறகு வந்த எல்லா ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் புகைப்படம் தொடர் அச்சு இடப்பட்ட நோட்டுகள் காணப்படுகின்றது. காந்தியின் புகைப்படம் வருவதற்கு முன் அச்சு இடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளையும் அவருடைய புகைப்படத்தை மாற்றியுள்ளது.

ரூபாய் நோட்டில் இருந்த சின்னங்கள்:

மகாத்மா காந்தி புகைப்படம் ரூபாய் நோட்டுகளில் இடம் பெறுவதற்கு முன்பாக  அசோக சின்னம் 10 ரூபாய் நோட்டுகளில் அதிக அளவு இடபெற்று உள்ளது.

அதன் பிறகு ஒடிசாவில் உள்ள கோனார்க் கோவில் 20 ரூபாய் நோட்டுகளில் அச்சு இடப்பட்டன.

பிரகதீஸ்வரர் கோவில் 1000 நோட்டுகளிலும், இந்தியாவின் நுழைவுவாயில் 5000 ரூபாய் நோட்டுகளிலும் அச்சுஇடப்பட்டன. இன்னும் வேறு சில புகைப்படங்களும் ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டன.

ரிசர்வ் வங்கி 1938-ல் தொடங்கி சுமார் 11 ஆண்டுகளாக இந்திய நாணய தாள்களில் காணப்பட்ட ஜார்ஜ் vi இன் உருவப்படத்திற்கு பதிலாக இந்திய தேசிய சின்னதுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற தமிழில் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் ⇒ Today usefull information