ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் பழமொழி விளக்கம் தெரியுமா..?

Advertisement

Yanaiku Oru Kalam Vanthal Palamoli Vilakkam Tamil

இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது ஒரு பயனுள்ள மற்றும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். தினமும் நமது பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை தான் அறிந்துகொள்ள போகின்றோம். அப்படி என்ன தகவல் என்று தானே சிந்திக்கிறீர்கள்..? ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் இந்த பழமொழியை பலர் கூற கேட்டிருப்போம். ஆனால் இதற்கான உண்மையான விளக்கம் உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் இதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

இதையும் படித்து பாருங்கள்=> அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் இந்த பழமொழிக்கான அர்த்தம் என்ன

பழமொழி விளக்கம்:

Yaanaiku oru kaalam vandhal poonaiku oru kaalam varum

நாம் பல பழமொழிகளை கேட்டிருப்போம் சில சமயங்களில் கூறியும் இருப்போம். ஆனால் அதற்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது. அதேபோல தான் ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் பழமொழியையும் கூறியிருப்போம்.

ஆனால் அதற்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது. இந்தப் பழமொழிக்கு பல பொருள் உண்டு. அவற்றில் சிலவற்றை காணலாம்.

யானை போல பலமானவர்களுக்கு ஒரு காலம் வந்தால், பூனை போன்ற பலம் குறைந்தவர்களுக்கும் ஒரு காலம் வரும் என்பது நேரடியாக நாம் புரிந்து கொள்ளும் பொருள். ஆனால் இதற்கு வேறு சில அர்த்தங்களும் உண்டு.

இதையும் படித்து பாருங்கள்=> பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தும் பழமொழிக்கான அர்த்தம் தெரியுமா

 ஆ நெய் என்பது தான் காலப்போக்கில் ஆனை என்று மாறியதாகவும். பூ நெய் என்பது தான் பூனை என்று மாறியதாகவும் கூறப்படுகிறது. ஆ நெய் பசுவின் நெய் என்று பொருள். பூ நெய் என்றால் தேன் என்று பொருள்.  

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால், பூநெய்க்கும் ஒரு காலம் வரும்” என்று வைத்துக்கொண்டால், இந்த பழமொழிக்கு இன்னொரு அர்த்தம் வரும்.  அது என்னவென்றால் பசு மாட்டு நெய் அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடலில் கொழுப்பு சேரும், அந்தக் கொழுப்பைக் குறைக்க தேன் உதவும் என்பது இந்தப் பழமொழியின் அர்த்தம். 

Yanaiku Oru Kalam Vanthal Palamoli Vilakkam Tamil:

நமது முன்னோர்களின் பெருமைகளை கூறும்பொழுது சிலர் யானை கட்டிப் போரடித்த பரம்பரை என்று கூறுவதை கேட்டிருப்போம்.

 நமது முன்னோர்களின் காலத்தில் பொதுவாக அறுவடைக் காலங்களில் போரடிக்க யானையைக் கூட்டி வருவார்கள். அறுவடை எல்லாம் முடிந்து நெல்லை சேமித்து வைத்ததும், நெல்லைத்தின்பதற்கு எலிகள் நிறைய வரும். அப்படி வரும் எலிகளை வேட்டையாட பூனைகளை கொண்டுபோய் விடுவார்கள். 

ஆகையால் தான் ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் என்ற பழமொழி உருவானது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படித்து பாருங்கள்=> வெறும் கையில் முழம் போடுவது என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தெரியுமா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement