அட அட்ராசக்க அடுத்து வருகிறது லெனோவா வின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்

லெனோவா வின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்

உங்கள் செவிகளுக்கு விருந்தளிக்கக்கூடிய ஒரு முக்கிய செய்தி. பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் 5ஜி போன்களை சந்தைக்கு கொண்டுவர மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது லெனோவா நிறுவனத்தின் துணை ப்ரெசிடெண்ட் சாங் செங் உறுதியாக லெனோவா நிறுவனம் தான் முதல் நிறுவனமாக இந்த ஆண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை சந்தைக்கு அறிமுகம் செய்யுமென்று உறுதி அளித்துள்ளார்.

லெனோவாவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்:

லெனோவா வின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அட்டகாசமான புதிய ஸ்னாப்டிராகன் 855 SOC யுடன் சந்தையில் களமிறக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதே போல் ரோலண்ட் குவாண்டட் இன் குறிப்பின் படி, புதிய குவல்காம் சிப் தீவிர தயாரிப்பில் ஜூன் தொடக்கத்தில் இருந்தே தொடங்கிவிட்டதாம்.

இந்த புதிய ஸ்னாப்டிராகன் 855 சிப் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2019 தொடக்கத்தில் சந்தைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

லெனோவா Z5:

இருப்பினும் செங் அனைத்துச் செய்திகளையும் மிகைப்படுத்திக் கூறுவதில் கெட்டிக்காரர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

லெனோவா Z5 ஸ்மார்ட்போன் டீஸர் வெளிவந்த பொழுது செங், லெனோவா Z5 இல் நாட்ச் இல்லாத டிஸ்பிலே மற்றும் ராட்சஸ பேட்டரியுடன் வருமென்று கூறினார், ஆனால் லெனோவா Z5 சந்தைக்கு வந்த பொழுது நாட்ச் டிஸ்பிலே மற்றும் 3300 எம்எஎச் பேட்டரி பேக்கப்புடன் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.

5ஜி போன்:

லெனோவா நிறுவனத்தைப் போன்றே, 5 ஜி போன்களைச் சந்தைக்கு அறிமுகப்படுத்த மற்ற முன்னணி நிறுவனங்களான ஒப்போ, ஹவாய் மற்றும் ஒன்ப்ளஸ் தீவிரம்காட்டியுள்ளது. எனவே 2019 இல் நம் கைகளில் 5ஜி போன் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

5ஜி ஸ்மார்ட்போன் 2019:lenova 5G

2019 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்படும் என்று ஹவாய் தெரிவித்துள்ளது.

அதேபோன்று ஒன்ப்ளஸ், அதன் 5ஜி ஸ்மார்ட்போன்களை 2019 இல் அறிமுகம் செய்யுமென்று உறுதியளித்துள்ளது.

இத்துடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 இல் 5ஜி இணக்கம் இருக்குமென்று வதந்திகள் வெளிவந்துள்ளது.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE