5G Network Disadvantages in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் 5G தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்து என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். மொபைல் தொழில்நுட்பத்தின் 5 ஆவது தலைமுறை 5G தகவல் தொடர்பு வலையமைப்பாக உருவாகி வருகிறது. இந்த 5G தொழில்நுட்பம் பல மடங்கு அதிவேகமான சேவைகளை வழங்குகிறது. ஆராய்ச்சியாளர்கள் கூறும் வகையில் இந்த 5G தொழில்நுட்பத்தால் பல நன்மைகள் இருந்தாலும், இந்த 5G நெட்வொர்க் மூலம் ஆபத்துகளும் உண்டு. 5G தொழில்நுட்பத்தால் வரப்போகும் ஆபத்துகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
5G தொழில்நுட்பம் பற்றி உங்களுக்கு தெரியுமா..? அதனால் என்ன நன்மைகள் இருக்கிறது..! |
5G தொழில்நுட்பத்தின் தீமைகள்:
5G -யின் வரையறுக்கப்பட்ட கவரேஜ்:
5G தொழில்நுட்பம் அதிவேக திறனை பெற்றிருந்தாலும், உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு மட்டுமே இந்த 5G நெட்வொர்க்கின் சேவை முழுமையாக கிடைக்கும்.
அதாவது, இந்த 5G நெட்வொர்க்கை கிராம பகுதிகளில் இருக்கும் மக்கள் பயன்படுத்த முடியாது. இது அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு மட்டுமே 5G தொழில்நுட்பம் பயன்படுகிறது.
5G -யின் ஒளிபரப்பும் தூரம்:
5G தொழில்நுட்பம் அதிவேகமாக வேலை செய்தாலும், 4G உடன் ஒப்பிடும் போது அது அதிக தூரம் வேலை செய்யாது. அதுமட்டுமில்லாமல், பெரிய கட்டிடங்கள், மரங்கள் அல்லது பெரிய கோபுரங்கள் 5G -யின் ஒளிபரப்பும் அலைகளின் அதிர்வெண்ணை தடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இதனால் பல்வேறு சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
5G பயன்படுத்தினால் பேட்டரி என்னவாகும்..?
பொதுவாக நாம் 4G பயன்படுத்தும் போதே ஸ்மார்ட்போன் பேட்டரி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் சூடாகும். அதேநேரத்தில் நாம் 5G இணைப்பைப் பயன்படுத்தினால் போன்கள் பேட்டரியின் ஆயுளைக் குறைத்து விடும்.
இந்த 5G தொழில்நுட்பம் பயன்படுத்துவதால் போன் பேட்டரிகள் அதிகபடியான வெப்பத்தை வெளிப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றது.
அதனால் உற்பத்தியாளர்கள் சேதங்கள் மற்றும் பிற பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பதற்கு புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.
விரைவில் வரவிருக்கும் Jio 5G Phone.. விலை எவ்வளவு? |
5G -யின் பதிவேற்ற வேகம் எப்படி இருக்கும்..?
5G தொழில்நுட்பம் மொபைல் போனின் அதிவேக பதிவிறக்கத்தை உறுதி செய்கின்றன. அதேபோல 4G உடன் ஒப்பிடும் போது 100 Mbps க்கு மேல் 5G யின் பதிவேற்ற வேகம் அதிகமாக இருக்கும். இதனால் 5G பயன்படுத்தும் போது மொபைல் போன்கள் வெப்பமாகும் என்று சொல்லப்படுகிறது. இது இணைய பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுகிறது.
இதுபோன்ற பாதிப்புகள் 5G தொழில்நுட்பத்தால் வரப்போகும் ஆபத்துகள் என்று கூறலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |