ஆதார் கார்டு பற்றி கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!

Advertisement

Aadhaar Card Information in Tamil

அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்… இன்றைய பதிவில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில தகவல்களை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். ஆதார் அட்டை ஒரு மனிதனின் ஆதாரமாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஆதார் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும்.

ஆதார் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண் தான் ஆதார் கார்டு. அதுபோல இன்று நாம் இந்த பதிவின் மூலம் ஆதார் அட்டை பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஆன்லைனில் எப்படி ஆதார் நம்பரை தெரிந்து கொள்வது..?

ஆதார் கார்டு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவகல்கள்:

ஆதார் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. நம் தேவைகள் அனைத்திற்கும் முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு பயன்படுகிறது. இது நம் இந்திய நாட்டில் எந்த இடத்திலும் ஒரு மனிதனின் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படுகிறது.

ஆதார் அட்டை எந்த அளவிற்கு முக்கிய ஆவணமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதை தவறாக பயன்படுத்த முடியும். அந்த வகையில் இவ்வளவு முக்கியமான ஆவணத்தில் நாம் செய்யக் கூடாத செயல்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஆதார் எண் பயன்படுத்தும் முறை:

உங்கள் ஆதார் எண்ணை மற்ற இடங்களில் பகிரும் போது கவனமாக இருக்க வேண்டும். அதாவது, ஒரு நிறுவனம் உங்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தும் போது உங்களின் அனுமதி பெற்று பயன்படுத்துமாறு சொல்ல வேண்டும்.

உங்கள் அனுமதி இல்லாமல் ஆதார் எண்ணை யாரும் பயன்படுத்த கூடாது. இதன் மூலம் எந்த தவறுகளும் நடக்காமல் இருக்கும்.

ஆதார் எண் தவறாக பயன்படுவதை எப்படி கண்டுபிடிப்பது..? 

ஆதார் எண்ணை மற்ற இடங்களில் பயன்படுத்தும் போது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் VID மூலம் பயன்படுத்தலாம்.

VID என்பது Virtual ID என்று சொல்லப்படுகிறது. இந்த Virtual ID ஒரு மாதத்திற்கு பின் மாற்றி கொள்ளும் வசதியும் உள்ளது.

இதன் காரணமாக உங்கள் ஆதார் எண் தவறாக பகிரப்படாமல் இருக்கும்.

OTP எண்ணை பயன்படுத்துங்கள்:

நாம் ஆதாருடன் இணைத்த மொபைல் எண்ணை வைத்து கொள்ள வேண்டும். ஆனால், ஏதேனும் சந்தர்ப்பங்களின் காரணமாக அந்த மொபைல் எண் இல்லை என்றால் என்ன செய்வது.

இதன் மூலம் நம் ஆதார் எண்ணிற்கு வரும் தகவல்கள் வராமல் போய் விடுகிறது. அதனால் உங்களுடைய ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றாமல் வைத்து கொள்ள வேண்டும்.

மேலும், உங்களுக்கு ஆதார் எண் பகிரப்படுகிறது என்ற சந்தேகம் இருந்தால் UIDAI என்ற ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆதார் கார்டின் வரலாற்றினை தெரிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் உங்கள் ஆதார் கார்டு எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement