கொரோன பாதிப்பை கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது ஆப்..! Aarogya setu app details

Advertisement

கொரோன பாதிப்பை கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது ஆப்..! Aarogya setu app details..!

Aarogya setu app details:-

corona app:– இந்தியாவில் கொரோன வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இன்றைய நிலைப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000-ஐ கடந்துள்ளது.

இந்த பதிப்பில் இருந்து அனைவரும் தற்காத்துக்கொள்ள அதாவது கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவா் நிலை குறித்து அறியவும், அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் அளிக்கவும் ஆரோக்கியசேது என்ற புதிய மொபைல் செயலியை (அப்ளிகேஷன்) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஆரம்பகட்டத்திலேயே இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது,” என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அதை பற்றிய தகவல்களை இங்கு நாம் படித்தறிவோம் வாங்க.

Aarogya setu app details logo:

Aarogya Setu app
இந்த ஆப் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
Aarogya Setu app 

Aarogya setu app details / corona app:-

நீங்கள் செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு அதாவது ஆரோக்கிய சேது ஆப்-ஐ ஆப் டவுன்லோட் செய்த பின் தங்கள் மொபைல் எண்ணினை டிப் செய்து பதிவு செய்ய வேண்டும்.

பிறகு மொழியினை தேர்வு செய்து கொள்ளுங்கள் இந்த ஆரோக்கிய சேது செயலியில் ஆங்கிலம், இந்தி உட்பட 11 மொழிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே அவற்றில் மொழி தேர்வு செய்த பிறகு உங்கள் லொக்கேஷன் ஷேரிங் பகுதியை ‘Always’ என்று செட் செய்துகொள்ளவும்.

ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆன் செய்துகொள்ளவும். மிகவும் எளிமையாக முறையில் ஓடிபி சார்ந்த மொபைல் எண் பரிசோதனை மூலம் சைன்–இன் ஆகும்.

பிறகு உங்கள் வயது, பாலினம், தொழில், பயணம் செய்த தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை நீங்கள் அளிக்கலாம்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கட்டணமில்லா அரசாங்க ஹெல்ப்லைன்களும் இதில் வழங்கப்படும். இந்தச் செயலியில் சாட் வசதிகளும் உள்ளது எனவே நீங்கள் சாட் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். உங்களது அறிகுறிகளை வழங்கி உரையாடலைத் தொடங்கலாம். நீங்கள் பாதுகாப்பான நிலையில் இருக்கிறீர்களா அல்லது ஆபத்தான நிலையில் இருக்கிறீர்களா என்பதை மதிப்பிட இந்தச் செயலி உதவும்.

இந்த ஆப் உங்களது மொபைலின் ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் அமைப்பைப் பயன்படுத்தி கோவிட்-19 பாதிக்கப்பட்ட நபர் யாரேனும் உங்களிடமிருந்து 6 அடி தூரத்தில் இருந்தால் உங்களை எச்சரிக்கும்.

அந்தக் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நோயாளிகளின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு எச்சரிக்கை இந்த ஆரோக்கிய சேது செயலி (Aarogya setu app details) அளிக்கின்றது.

அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ளும் விதம், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்த சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டல்கள் இந்த ஆரோக்கிய சேது (corona app) செயலியில் வழங்கப்படுகிறது.

குறிப்பு:

உங்களது தரவுகள் இந்திய அரசாங்கத்துடன் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும். எந்த ஒரு தருணத்திலும் இந்த செயலியின் மூலம் உங்களது பெயரும் தொலைபேசி எண்ணும் மற்றவர்களுக்கு வெளியிடப்படாது,” என்று என்ஐசி உறுதியளித்துள்ளது.

 

இந்த ஆப் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
Aarogya Setu app 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement