இந்தியாவில் இனி Bsnl, Jio மட்டும் தான்..!
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆன ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றிய விவரங்களை தான் இந்த பகுதியில் நாம் காணப்போகிறோம். அதாவது ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா மூன்று சேவை நிறுவனங்களும் இணைத்து, கொஞ்ச நாட்களாக குறைந்தது ரூபாய் 35/- செலுத்தினால் தான் (airtel net pack) இன்கமிங் கால் வசதியை பெற முடியும் என்று அறிவித்துள்ளது.
எதற்காக இந்த திடீர் அறிவிப்பை இந்த மூன்று நிறுவனமும் இணைத்து அறிவித்துள்ளது என்றும், இவற்றின் ரகசியம் தான் என்ன என்பதை பற்றி தான் இப்போது நாம் காணப்போகிறோம்.
அதாவது நம்மில் பலர் நெட் மற்றும் அவுட்கோயிங் வசதிக்காக ஜியோ சிம்மையும், இன்கமிங் கால்களுக்காக ஏர்டெல் சிம்மையும் பயன்படுத்தி வருகிறோம் அல்லவா.
இவற்றை கண்டறிந்த இந்த நிறுவனம் தங்களது நெட்ஒர்க்கை (airtel net pack) அதாவது இன்கமிங் காலிற்கு மட்டும் யாவர் தங்களது சேவையை பயன்படுத்துகின்றனரோ, அப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது சேவை இணைப்பில் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் என்று இந்த மூன்று நிறுவனமும் இணைத்து முடிவு எடுத்துள்ளனர்.
அப்படி உங்களுக்கு இன்கமிங் கால்ஸ் வேண்டும் என்றால் ரூபாய்.35/- முதல் 249/- ரூபாய் வரை உள்ள ஏதேனும் ஒரு ரீச்சார் வசதியை செய்து, ரீச்சாஜ் செய்தால் தான் இன்கமிங் கால்சை பெறமுடியும்.
அதுவும் ரூபாய் 35-க்கு ரீச்சாஜ் செய்தால் மாதத்திற்கு மெய்ன் பேலன்ஸாக ரூபாய்.28/– அளிக்கப்படுமாம். அதுவும் அந்த மாதத்திற்குள் அந்த மெய்ன் பேலன்ஸ் இருந்தாலு சரி இல்லாவிட்டாலும் சரி பின்பு தொடர்ந்து அடுத்த மாதத்திற்கு ரூபாய் 35/- செலுத்தினால் தான் திரும்பவும் இன்கமிங் கால்சை பெற முடியும் என்று இந்த மூன்று நிறுவனமும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்த மூன்று நிறுவனத்தையும் சேர்த்தால் சுமார் 2 கோடி வாடிக்கையாளர்கள் தங்களது இணைப்பில் இருந்து வேறொரு இணைப்பிற்கு மாறிவிடுவார்கள் என்ற எண்ணத்தை பொருட்படுத்தாமல், எதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா?
அதாவது நெட் ஒர்க் மற்றும் அவுட் கோயிங் வசதிக்காக ஜியோவை பயன்படுத்தும் நாம், திடீர் என்று ஏர்டெல்லில் இருந்து ஜியோவிற்கு மாறுகின்றோம் என்றால் ஜியோ சிம்மிற்க்கும் ரீச்சாஜ் செய்ய வேண்டும், அதேபோல் ஏர்டெல் சிம்மிற்க்கும் ரீச்சாஜ் செய்ய வேண்டும்.
எனவே திடீர் என்று ஜியோவிற்கு மாறமாட்டோம். எனவே வேறு என்ன நெட் ஒர்க் இருக்கிறது என்றால் இந்த மூன்று நிறுவனம் தான் இருக்கும். எனவே இந்த மூன்று நிறுவனம் சொல்லும் ரீச்சாஜ் செய்தால் தான் இன்கமிங் கால்ஸ் பெற முடியும்.
குறிப்பாக 35/- ரூபாய் ரீச்சார் செய்யாவிட்டால், உங்களுடைய சிம் கார்டை உங்களுடைய அனுமதி இன்றியே கேன்சல் செய்து. ரன்னிங்கில் விட்டு விடுவார்கள். அதாவது பிளாக் செய்து விடுவார்கள்.
வேறு வழி தான் என்ன?
இந்த திட்டத்தை முறியடிப்பதற்கு ஒரு சிறந்த வழியாக bsnl உதவுகிறது. bsnl நிறுவனத்தை பொறுத்த வரை, இன்கமிங் காலிற்கு ரீச்சாஜ் செலுத்தாமல் பெற முடியும். எனவே இன்கமிங் காலிற்கு மட்டும் ஏர்டெல், ஐடியா மற்றும் வோடோபோன் சேவையை ரூ. 35/- செலுத்தி பயன்படுத்துகின்றிர்கள் என்றால், அவர்கள் இப்போதே bsnl தொலைதொடர்பு சேவை நிறுவனத்தில் இணைத்து விடுங்கள்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.