ATM கார்டு இல்லாமல் Indian Bank ATM -ல் பணம் எடுப்பது எப்படி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Cardless Withdrawal in Tamil

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய பரபரப்பான உலகில் அனைவருமே வேலைக்கு செல்கிறார்கள். அப்படி செல்லும் போது சில சமயம் நாம் வீட்டிலேயே முக்கியமான பொருட்களை மறந்து வைத்து விடுகிறோம். அப்படி நாம் மறந்து வைக்கும் பொருள்களில் ஓன்று தான் ATM கார்டு. அந்த வகையில் ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி..?

cardless transaction in atm

இன்றைய நிலையில் அனைவருமே பணத்தை கையில் வைத்து கொள்வதில்லை. பணத்தை Bank Account -இல் வைத்து கொண்டு தேவைப்படும் போது ATM கார்டு மூலம் எடுத்து கொள்கிறார்கள். அதுவே ATM கார்டு கையில் இல்லை என்றால் என்ன செய்வது.

அதற்காக தான் வங்கிகள் ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதியை வழங்கியுள்ளது. ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி ஒரு சில வங்கிகளுக்கு மட்டுமே உள்ளது. இப்போது அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் நெட்வொர்க் UPI ஐப் பயன்படுத்தி கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி வந்துள்ளது. அந்த வகையில் ATM கார்டு இல்லாமல் Indian Bank ATM -ல் பணம் எடுப்பதை பற்றி பார்ப்போம்.

Indian Bank Mobile Banking செயலில் MPIN மற்றும் MTPIN ஆகியவற்றை மாற்றம் செய்வது எப்படி..?

ஸ்டேப் -1

Indian Bank ATM கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருமே Indoasis என்ற ஆப் பயன்படுத்துவீர்கள். அப்படி இல்லை என்றால் Play Store -ல் Indoasis ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

Cardless Cash

முதலில் உங்களுடைய Indoasis ஆப் உள்ளே செல்லுங்கள். பின் அதில் Cardless Cash என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3 

Generate Token

பின் அதில் 3 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Generate Token என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் Account நம்பரை Select செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -4 

Enter Amount

பின் ஒரு திரை தோன்றும் அதில் Enter Amount என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதை தேர்வு செய்து கீழே இருக்கும் Generate Token என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைலுக்கு ஒரு OTP எண் வரும்.

ஸ்டேப் -5 

பின் ATM -க்கு செல்லுங்கள். அதில் Cardless Transaction என்று இருக்கும் அதை கிளிக் செயுங்கள்.

ஸ்டேப் -6 

அடுத்து Withdrawal To Indoasis என்று வரும். அந்த பட்டனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

ஸ்டேப் -7

பின் உங்களுடைய Account நம்பர் கேட்கும் அதை கொடுத்து Enter செய்யுங்கள்.

ஸ்டேப் -8

அடுத்து உங்கள் போனிற்கு வந்திருக்கும் OTP எண்ணை கொடுத்து Enter செய்யுங்கள். இப்போது நீங்கள் கொடுத்த Amount உங்களுக்கு கிடைக்கும்.

அவ்வளவு தான் நண்பர்களே..!  இனி நீங்கள் ATM கார்டு இல்லாமல் இதுபோல பணம் எடுத்து கொள்ள முடியும். மேலும், நீங்கள் தேர்வு செய்யும் பணம் 500 ரூபாய் என்ற கணக்கில் இருக்க வேண்டும். 100 அல்லது 200 என்று போட்டால் பணம் எடுக்க முடியாது. அதுபோல ஒரு நாளைக்கு ATM கார்டு இல்லாமல் 5000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.  

இதையும் பாருங்கள் => SBI Internet Banking Password-ஐ Reset செய்ய வேண்டுமா? அதற்கான வழிமுறை இதோ..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement