பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம் | BSNL 397 Plan Details in Tamil

Advertisement

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான் | BSNL 397 Offer Details in Tamil

இப்போது சாதாரண மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அதிகரித்துவிட்டார்கள். BSNL நிறுவனம் தற்போது தொடர்ந்து பல சலுகை திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் BSNL நிறுவனம் ரூ. 397 ப்ரீபெய்ட் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. சரி வாங்க BSNL நிறுவனம் அறிவித்துள்ள ரூ. 397 ரீசார்ஜ் பிளான் பற்றிய விவரங்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

ஜியோ ரீசார்ஜ் சலுகைகள் 2022

பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம்:

அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) சமீபத்தில் அதன் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றான ரூ.365-ஐ விலையை அதிகரித்து தற்போது ரூ.397 க்கு ரீசார்ஜ் ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது.

இந்த விலையில் வேறு எந்த மொபைல் நிறுவனமும் ஒரு வருட காலம் அதாவது 365 நாட்கள் என்ற செல்லுபடியை அமல்படுத்தவில்லை.

இந்த BSNL திட்டத்தின் நன்மைகள் வருடம் முழுவதும் ஒரே மாதிரியான சலுகைகளை கொடுக்காவிட்டாலும் பயனாளர்களுக்கு தங்கள் சிம் கார்டு ஆக்டிவ் ஆக வைத்திருக்க விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

BSNL ரூ. 397 ரீசார்ஜ் பிளானின் நன்மைகள்:

BSNL-ன் ரூ.397 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் அதன் பயனர்களுக்கு கால வரையற்ற கால்ஸ் லிமிட், மற்றும் 2 GP அளவில் இன்டர்நெட் டேட்டாவை 60 நாட்கள் வரையிலும் மக்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும்.

மேலும் ஒரு நாளிற்கு 100 இலவச SMS ஆகியவற்றையும் இந்த பிளானின் மூலம் பெறலாம்.

சாதாரண பட்டன் போன் மூலமும் இனி பண பரிவர்த்தனை ஈஸியா செய்யலாம்

 

தினசரி கொடுக்கும் 2 GB டேட்டாவினை பயன்படுத்தும் வரை பயனாளர்களுக்கு அதிவேகம் வரை கிடைக்கும். அதன் பிறகு இணைய வேகமானது 80 KBS-ஆக டேட்டா செயல்பாடானது குறைக்கப்படும்.

குறிப்பாக மற்ற நெட்ஒர்க்கிற்கும் அளவில்லாத கால் சேவைகளை வழங்கி வருகிறது.

இதன் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் என்றாலும் கூட, இதன் இலவச நன்மைகளான பி.ஆர்.பி.டி, வரம்பற்ற கால் வசதி, டேட்டா போன்றவைகள் 60 நாட்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும்.

குறிப்பிட்ட 60 நாட்களுக்கு பிறகு நிறுவனத்தின் பிற வவுச்சர்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம் வரம்பற்ற டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளைப் பெறலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement