நாம் எப்போதும் செய்கின்ற இந்த தவறை இனி ஸ்மார்ட் போனில் செய்யாதீங்க..!

Advertisement

Smartphone Network Use Mistakes

ஸ்மார்ட் போன் நிறைய பயன்படுத்துகிறோம். இதில் நல்லதும் கேட்டதும் இருக்கின்றது. அதனால் போனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும். மேலும் Network பயன்படுத்தும் போது நம்மை அறியாமல் தெரியாமல் சில தவறை செய்கின்றோம். அது என்னென்ன தவறுகள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Link:

போன் பயன்படுத்தும் போது நிறைய லிங்க் வாட்சப் அல்லது பேஸ்புக் மூலமாக வரும். அந்த லிங்கை நீங்கள் கவனிக்க வேண்டும். அதில் http அல்லது https என்று முதலில் ஆரம்பிக்கும். https என்றால் Hypertext Transfer Protocol Secure என்று அர்த்தம். இதில் https என்பது தான் Secure. அதனால் இதை கவனித்து உங்களின் தகவல்களை கொடுக்க வேண்டும்.

Face book:

facebook in tamil

இதில் நிறைய விதமான Games வரும். எடுத்துக்காட்டிற்கு உங்களை யார் அதிகமாக நேசிப்பது, உங்களுக்கு பிடித்தது என்றெல்லாம் வரும் அல்லவா.! நீங்களும் அதை கிளிக் செய்து அந்த Game -யை விளையாடுவீர்கள். இந்த Game -யை ஸ்டார்ட் செய்வதற்கு முன் Accept என்று கேட்கும் நீங்களும் கொடுத்துவிடுவார்கள். அதில் உங்களின் தகவல்கள் திருடப்படுகிறது. நீங்கள் ACCEPT என்று கொடுப்பதற்கு முன்னாள் அதில் உள்ளதை படித்து பார்த்து கொடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ உங்களது ஸ்மார்ட் போனில் இதெல்லாம் செய்கிறீர்களா.?

Gmail account:

நீங்கள் போனில் பயன்படுத்தும் செயலிகள் அனைத்திற்கும் ஒரே விதமான User Name, Password கொடுக்க வேண்டாம். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மாதிரியான User Name கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஒரு Account திருடப்பட்டால் எல்லா Account -ம் Hack ஆகிவிடும்.

Location:

Location in tamil

போன் கேமராவில் Settings என்பதை கிளிக் செய்து Location என்பதை off செய்து வைக்கவும். ஏனென்றால் நீங்கள் போட்டோ எடுத்து விட்டு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் போடும் போது அந்த போட்டோவில் Details என்பதை கிளிக் செய்தால் எந்த Location என்பதை காட்டும். அதனால் இதை off செய்து வைத்திருப்பது நல்லது.

Public Wi-fi:

public wifi in tamil

Free ஆக கிடைக்கும் எந்த விதமான Wifi -யும் பயன்படுத்தாதீர்கள். அதிலிருந்து உங்களின் தகவல்கள் திருடப்படும்.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் ஸ்மார்ட் போனின் Pattern -யை மறந்து விட்டீர்களா..? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement