நெல் கொள்முதல் ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

Advertisement

நெல் கொள்முதல் ஆன்லைன் பதிவு | DPC  Paddy Online Registration in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய தொழில்நுட்பம் பகுதியில் நெல் கொள்முதல் பதிவு செய்வது எப்படி என்று பார்க்கலாம். விவசாயிகள் விளைவித்த பயிர்களை விற்பனை செய்வதற்கு மண்டியை அணுக வேண்டி வரும். இதனால் விவசாயிகளுக்கு சரியான லாபம் கிடைப்பது குறைவு தான். விவசாயிகளுக்கு சரியான வருமானம் கிடைப்பதற்காக தமிழக அரசு நெல்லை நேரடியாக விற்பனை செய்வதற்கு இணையதளம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் உங்களது பயிர்களை விற்பனை செய்து கொள்ளலாம். சரி வாங்க ஆன்லைன் மூலம் எப்படி நெல் கொள்முதல் பதிவு செய்யலாம் என்று பார்க்கலாம்.

நெல் கொள்முதல் பதிவு செய்வது எப்படி?

  • Direct Purchase Centres என்பது DPC Full Form.
  • https://tncsc-edpc.in/ என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.

dpc online registration in tamil

  • முதலில் Farmer Login என்ற இடத்தில் உங்களது தொலைபேசி எண்ணை உள்ளிடவும். பின் Generate OTP என்பதை கிளிக் செய்தால் உங்கள் தொலைபேசிக்கு OTP வரும். அதனை OTP என்ற இடத்தில் உள்ளிட்டு LOG IN என்பதை கிளிக் செய்யவும்.

Nel Kolmudhal Pathivu Seivathu Eppadi:

nel kolmudhal pathivu seivathu eppadi

  • லாகின் செய்தவுடன் மேலே படத்தில் உள்ளவாறு ஒரு பேஜ் Open-ஆகும். அதில் தங்களுக்கான மொழியை தேர்ந்தெடுக்கவும். மொழியை செலக்ட் செய்த பிறகு, உழவனின் பெயர் என்ற இடத்தில் தங்களது பெயரை உள்ளிடவும். பின்னர் தங்களது ஆதார் எண்ணை உள்ளிடவும்.

நெல் கொள்முதல் ஆன்லைன் பதிவு:

nel kolmudhal pathivu seivathu eppadi

  • பயிரிடும் நிலத்தின் வகை என்பதில் தங்களுக்கு Own land -ஆக இருந்தால் அதனை தேர்வு செய்யவும், குத்தகை நிலமாக இருந்தால் அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • நில அளவை என்ற இடத்தில் Survey எண், உட்பிரிவு என்ற இடத்தில் Sub division எண்ணையும், நிலத்தின் பரப்பளவு என்ற இடத்தில் நிலத்தின் (ஏக்கர்) அளவையும் உள்ளிட்டு கொள்ளவும்.
  • பின்னர் நெல் சாகுபடி செய்த நிலத்தின் பரப்பளவு என்ற இடத்தில் சாகுபடி செய்த நெற்பயிரின் அளவை பூர்த்தி செய்ய வேண்டும். பின் நெல்லின் வகை மற்றும் நெல்லின் ரகத்தை செலக்ட் செய்து கொள்ளவும்.

நெல் கொள்முதல் பதிவு எப்படி?

nel kolmudhal pathivu seivathu eppadi in tamil

  • அதன் பிறகு தங்கள் மாவட்டத்தின் பெயர், கிராமத்தின் பெயரை தேர்வு செய்யவும். எதிர்பார்க்கப்படும் மகசூல் என்ற இடத்தில் எத்தனை மூட்டை மகசூல் உள்ளதோ அதனை உள்ளீட்டு கொள்ளுங்கள்.
  • பின் கொள்முதல் தேதி என்ற இடத்தில் அறுவடை செய்த தேதியை உள்ளீடவும்.  தங்களது தொலைபேசி எண், வங்கிக்கணக்கு எண் (Account No) கொடுக்கவும்.
  • வங்கி குறியீட்டு எண் என்ற இடத்தில் IFSC Code -ஐ உள்ளிட்டவுடன் கீழே option வரும். அதில் தங்களது வங்கியை செலக்ட் செய்தவுடன் வங்கியின் பெயர், வங்கியின் கிளை வந்துவிடும்.

Nel Kolmudhal Pathivu Seivathu Eppadi:

how to apply paddy direct purchase in tamil

  • பின்னர் மேலே குறிப்பிட்ட அனைத்தும் உண்மை என்பதில் டிக் செய்யவும். அதன் பின் சமர்ப்பி என்பதை கிளிக் செய்தால் உங்களது அக்கௌன்ட் ரிஜிஸ்டர் ஆகிவிடும்.

Dpc Paddy Online Registration in Tamil:

how to apply paddy direct purchase in tamil

  • உங்கள் விவரங்களை சரிபார்த்து கொள்ள My Details என்பதை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம். அதில் உங்களுக்கான உழவர் குறியீடு மற்றும் DPC குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும்.

Nel Kolmudhal Pathivu Seivathu Eppadi:

how to apply paddy direct purchase in tamil

  • பின்னர் அதில் நில அளவு அல்லது வேறு ஏதாவது ஒன்றை கிளிக் செய்தால் அடுத்த பேஜ் ஓபன் ஆகும். அதில் VAO மற்றும் AAO உங்களது கோரிக்கையை அப்ரூவ் செய்ய வேண்டும். அப்ரூவ் வரவில்லை என்றால் நேரடியாக VAO-வை பார்க்க வேண்டும்.
  • அவர்கள் அப்ரூவ் செய்தவுடன் உங்களது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தியில் உங்களது நெல்லை விற்பனை செய்ய வேண்டிய தேதி வந்திருக்கும். அப்பொழுது நெல்லை நீங்கள் விற்பனை செய்து கொள்ளலாம்.

Dpc Paddy Online Registration in Tamil: 

how to apply paddy direct purchase in tamil

  • நெல்லின் விலை நிலவரங்களை தெரிந்துகொள்ள Paddy Rate Master என்பதை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம். அதில் தங்கள் நெல்லுக்கான நிர்ணய விலை, ரகம் வகை என அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.
பட்டா எண் அறிவது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement