குழந்தைகளை பாதுகாக்கும் புதிய கேட்ஜெட் !!!

Advertisement

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News) – உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட் !!!

இப்போது உள்ள காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் மோசமான நிலையில் அமைந்துள்ளது. எனவே வீட்டில் இருந்து வெளியே செல்லும் குழந்தை பாதுகாப்பாக உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள ஒரு அற்புதமான கேட்ஜெட் (gps watch for kids) வந்துள்ளது.

இந்த வாட்ச்சை குழந்தையின் கையில் கட்டினால் போதும், குழந்தை எங்கு உள்ளது, குழந்தை பாதுகாப்பாக உள்ளதா என்பதை நாம் போனிலேயே தெரிந்து கொள்ள முடியும்.

நோக்கியாவின் புது ஸ்மார்ட்போன்!!!

 

சரி வாங்க குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, GPS தொழில்நுட்பம் பொருந்திய, வாட்ச்சை (gps watch for kids) பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..!

இப்போது எல்லாம் பெண்களுக்கு எதிராக ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சமூக அவலங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றன. விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றால் கூட குழந்தைகள், பெண்கள் கடத்தப்படும் நிகழ்வுகள் அதிகமாவே நடந்து வருகிறது.

இதன் உச்சகட்டமாக பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தினமும் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News) – குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட்:-

இந்த நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய பல கேட்ஜெட்ஸ் (gps watch for kids) ஆன்லைனிலும், கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜி.பி.எஸ் வாட்ச் (gps watch for kids), ஜி.பி.எஸ் கீ செயின், ஜி.பி.எஸ் கருவிகள் என விலைக்கு தகுந்தாற் போல் விற்பனை செய்யப்படுகிறது.

கண்னை கவரும் நல்ல வண்ணங்களில் குழந்தைகளுக்காகவே ஜி.பி.எஸ் வாட்ச் (gps watch for kids) உள்ளது. இது 1,000/- ரூபாயிலிருந்து, தரத்துக்கு ஏற்றவாறு 2,000/- மற்றும் 5,000/- ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

நல்ல தரமான வாட்ச் 2,500/- ரூபாயில் கூட பெற முடியும். இதில் ஏற்கனவே ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

தொழில்நுட்ப செய்திகள் ஜியோவின் புதிய திட்டம்..! ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..!

குழந்தை எங்கு இருக்கிறது என்பதை இந்த வாட்ச் தெரியப்படுத்தும்:

இந்த வாட்ச்சை பெற்றோர்கள் தங்களது கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் ஆப் உடன் இணைத்துக் கொள்ளலாம். வாட்ச்சை குழந்தைகளின் கையில் கட்டிவிட வேண்டும்.

இப்போது குழந்தை எங்கு சென்றாலும், வீட்டில் இருந்தபடி பெற்றோர்கள் ஸ்மார்ட்போனில் பார்த்துக் கொள்ளலாம்.

இதே போல் குறிப்பிட்ட பரப்பளவு எல்லை தாண்டி சென்றால் போனில் அலாரம் அடிக்கும் வகையில், எல்லை அளவை செட் செய்து கொள்ளலாம்.

மேலும், ஆபத்து ஏதும் வந்தால், குழந்தை வாட்ச்சில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும். உங்கள் போனில் எச்சரிக்கை செய்தி வந்துவிடும்.

இதற்கு அடுத்ததாக 3,000 ரூபாய் வாட்ச்சில் டார்ச் லைட், வைஃபை, கேமரா, மோஷன் டிடக்டர் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளது.

பெற்றோர்கள் இதனை GPS Watch என்று அமேசானில் தேடினாலே கிடைக்கும். உங்கள் வசதி, விருப்பம், பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பல்வேறு கேட்ஜெட்கள் கிடைக்கும்.

தொழில்நுட்ப செய்திகள் வாட்ஸ்அப்பில் இனி போட்டோவும் எடிட் செய்யலாம்! புது அப்டேட்!!!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!
Advertisement