முதியோர் உதவித்தொகை | Old Age Pension | How to Apply OAP Online in Tamil
வணக்கம் நண்பர்களே… இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். முதியோர் உதவித்தொகை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் எவ்வளவோ நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் நாம் வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற முடியும். அதுபோல முதியோர் உதவித்தொகை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
முதியோர் உதவித்தொகை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
இனி நாம் அலுவலங்கங்களுக்கு அலைய தேவை இல்லை. எந்த நலத்திட்ட உதவிகளையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். அதுபோல, முதியோர் உதவித்தொகை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
இதையும் பாருங்கள் ⇒ முதியோர் ஓய்வூதியம் சார்ந்த தகவல்கள்
Step -1
முதலில் https://tnega.tn.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
Step -2
பின், குறிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். அதற்கு நீங்கள் அதனை தமிழ் மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Step -3
பின் அதில், குடிமக்களுக்கான சேவைகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step -4
பின்பு லாகின் என்று கேட்கும். அதை கிளிக் செய்து உங்கள் மொபைல் E-mail ID மற்றும் அதற்கான பாஸ்வேர்ட்(Password) பதிவு செய்யவேண்டும்.
Step -5
பின் அதில், ரெவன்யூ டிபார்ட்மென்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் அதன் கீழ் 3 என்ற எண்ணை கிளிக் செய்தால் முதியோர் உதவித்தொகை திட்டம் என்று வரும். அதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Step -6
பின் அதில், தேவையான ஆவணங்களை பற்றிய பட்டியல் தோன்றும். அதன் கீழ் ப்ரொஸீடு என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதில் முதலில் Register Can என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Step -7
பின் அதில், ஒரு விண்ணப்ப படிவம் தோன்றும். அதில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி போன்ற தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். பின் நீங்கள் கொடுக்கப்பட்ட முகவரிகள் சரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
Step -8
பின் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவேண்டும். உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP எண் வரும் அதை உள்ளீடு செய்ய வேண்டும்.
Step -9
பின் நீங்கள் தபால் அல்லது வங்கிக்கணக்கு மூலம் உதவித்தொகை பெற வேண்டும் என்று நினைத்தால் அதற்கான ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். வங்கி கணக்கு என்றால் வங்கி தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டும்.
Step -10
பின்னர், உங்கள் ஆதார் கார்ட் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களை அப்லோட் செய்யவேண்டும். பின், நெட் பேங்கிங் அல்லது யூபிஐ போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
Step -11
உங்கள் பகுதியில் உள்ள R.I அலுவலகத்திலிருந்து நீங்கள் கொடுத்த முகவரிகள் சரிப்பார்ப்பதற்காக அழைப்பர். நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த ஆவணங்களின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் எடுத்து செல்ல வேண்டும். ஆவணங்கள் சரியாக இருந்தால் மாதந்தோறும் உங்களுக்கான முதியோர் உதவித்தொகை கிடைக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |