ஆன்லைனில் எப்படி ஆதார் நம்பரை தெரிந்து கொள்வது?

Advertisement

How to Find Aadhaar Number Online in Tamil..!

வணக்கம் நண்பர்களே இந்தியாவில் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் அட்டை அவசியமாக பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு உங்களின் ஆதார் எண் அல்லது யுஐடி நினைவில் இல்லை என்றால் அல்லது கையில் வைத்திருந்த ஜெராக்ஸ் காப்பி தொலைந்து விட்டது என்றால்… கவலைப்பட தேவையில்லை, இல்லாத ஆதார் அட்டைக்கான நம்பர் அல்லது என்ரோல்மென்ட் நம்பரை ஆன்லைன் வழியாக கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கு.. அதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

முன் நிபந்தனைகள்:

  • பதிவு செய்யப்பட்ட எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி தேவை.
  • எஸ்எம்எஸ் வசதியுடன் குறிப்பிட்ட மொபைல் நம்பர் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும்.
  • நன்றாக வேலை செய்யும் இணைய இணைப்பு தேவை.

சரி வாங்க ஆன்லைன் மூலம் ஆதார் நம்பரை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

ஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?

How to Find Aadhaar Number Online in Tamil:

ஸ்டேப்: 1

இதற்கு முதலில் நீங்கள் https://resident.uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

ஸ்டேப்: 2

பின் அந்த இணையதளத்தின் முகப்பு பகுதில் My Aadhaar என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 3

பின் அதில் Aadhaar services என்ற ஆப்சனில் Retrieve Lost or Forgotten EID/ UID என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 4

அதன் பிறகு உங்களது தனிப்பட்ட விவரங்கள், பெயர், பதிவு செய்த மொபைல் எண் அல்லது மெயில் ஐடி-யை கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு கேப்ட்சா எழுத்துகளை சரியாக பதிவு செய்து Send OTP என்பதை கொடுக்க வேண்டும். இது ஆறு இலக்க ஓடிபி மொபைல் எண்ணுக்கு வரும்.

ஸ்டேப்: 5

அதனை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அல்லது மெயிலுக்கு ஆதார் எண் வந்திருக்கும்.

இதன் மூலம் உங்களது ஆதார் (Aadhaar) நம்பரை தெரிந்து கொள்ளலாம். இதை வைத்து தொலைந்துபோன ஆதார் கார்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI ATM கார்டு PIN நம்பர் மாற்றுவது எப்படி?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement