Gmail ID Password Recovery In Tamil
இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறோம். நாம் போன் வாங்கியதும் முதலில் Email ID தான் ஓபன் செய்வோம். அப்போது தான் ஸ்மார்ட் போனில் Whatsapp, Instagram, Facebook போன்ற செயலிகளை பயன்படுத்த முடியும்.
இன்னும் சொல்லப்போனால் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு Email ID கட்டாயம் தேவை. Email ID ஓபன் செய்யும் போது நாம் ஒரு Password கொடுத்திருப்போம். அது நாளடைவில் பலருக்கும் மறந்திருக்கும். அப்படி Email ID Password மறந்தவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து மறந்த உங்கள் Password -டை கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How To Gmail ID Password Recovery In Tamil:
ஸ்டேப் -1
முதலில் உங்களுடைய Google ஆப்க்குள் செல்ல வேண்டும். பின் அதில் மேலே உங்களுடைய Profile இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
பின் அதில் உங்கள் Email ID க்கு கீழே Manage Your Google Account என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
ஸ்டேப் -3
பிறகு அதில் கீழே Search Google Account என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஸ்டேப் -4
அதில் கீழே நகர்த்தி செல்ல வேண்டும். பின் அதில் Security என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -5
பின் ஒரு திரை தோன்றும். அதில் Password என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
உங்களுடைய போன் மூலம் கம்ப்யூட்டரில் இருக்கும் ஈமெயிலை logout செய்வது எப்படி..! |
ஸ்டேப் -6
அடுத்து அதில் Enter Your Password என்று கேட்கும். உங்களுக்கு Password தெரியாததால் நீங்கள் கீழே இருக்கும் Forgot Password என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -7
பின் அதன் கீழ் Try Another Way என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -8
பின் உங்கள் Email க்கு ஒரு Message வரும். அதில் உள்ளே சென்றால் நீல நிறத்தில் Review And Protect Your Account என்று இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -9
பின் ஒரு திரை தோன்றும். அதில் Enter Your Password என்று இருக்கும். அதில் கிளிக் செய்தால் கீழே உங்களுடைய Password கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து உங்களுடைய Email ID Password -ஐ Recover செய்து கொள்ளலாம்.
அவ்வளவு தான் நண்பர்களே..! மேலே கூறப்பட்டுள்ள முறைகளை செய்து மறந்த உங்கள் Email ID Password -ஐ Recover செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய Facebook Password மறந்துவிட்டீர்களா..? அப்போ இப்படி செய்யுங்கள்..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் |