How To Pay House Tax Online
வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இந்த பதிவு இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருக்கிறது. ஸ்மார்ட் இல்லாத வீடுகளே கிடையாது. அதுபோல உள்ளங்கையில் உலகமே இருக்கிறது என்று சொல்வதற்கு காரணமே ஸ்மார்ட் போன் தான். நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் பல விஷயங்கள் இருக்கிறது.
ஸ்மார்ட் போனில் நல்ல விஷயங்களும் இருக்கிறது. தீய விஷயங்களும் இருக்கிறது. இரண்டுமே போனை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் உள்ளது. சரி இன்றைய நிலையில் அனைவருமே போன் மூலம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் இன்று வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வீட்டு வரி செலுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How To Pay House Tax Online in Tamil:
ஸ்டேப் -1
முதலில் வீட்டு வரி ஆன்லைனில் செலுத்துவதற்கு tnurbanepay.tn.gov.in என்ற அரசின் அதிகார வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
ஸ்டேப் -2
பின் ஒரு திரை தோன்றும். அதில் சில ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Quick Payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -3
பிறகு ஒரு புதிய திரை ஓபன் ஆகும். அதில் முதலில் Property Tax என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.
ஸ்டேப் -4
பின் அதில் Make Payment என்ற பாக்ஸ் தோன்றும். அதில் முதலில் Assessment Number என்ற ஆப்சன் இருக்கும்.
வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி |
ஸ்டேப் -5
அதில் நீங்கள் இதுக்கு முன் கட்டிய வீட்டு வரி ரசீதியில் Assessment Number என்று ஒரு நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும். அதை இந்த பாக்சில் உள்ளிட வேண்டும். பின் அதன் கீழே இருக்கும் Search என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -6
அடுத்து ஒரு திரை தோன்றும். அதில் உங்களுடைய முகவரிகள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். அது அனைத்து சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப் -7
அடுத்து கீழே கொஞ்சம் நகர்த்தி சென்றால் அங்கு DCB Details என்று ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் கீழே Payable Payment என்ற இடத்தில் நீங்கள் எவ்வளவு வீட்டு வரி கட்ட வேண்டும் என்று இருக்கும்.
ஸ்டேப் -8
அதற்கு கீழ் Payment Amount என்ற பாக்சில் நீங்கள் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதை கொடுத்து Submit கொடுக்க வேண்டும்.
வீட்டு வரி கட்டுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள் |
ஸ்டேப் -9
அடுத்து ஒரு திரையில் நீங்கள் கொடுத்த Details இருக்கும். அது சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொள்ள வேண்டும். பின் அதில் கீழே I Agree என்ற பாக்சில் கிளிக் செய்து Confirm கொடுக்க வேண்டும்.
ஸ்டேப் -10
அடுத்து நீங்கள் பணத்தை எப்படி செலுத்த போகிறீர்கள் என்ற ஆப்சன் இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் Internet Banking மூலம் செலுத்த போகிறீர்கள் என்றால் அதை கிளிக் செய்து உங்கள் Bank இன் பெயரை கொடுத்து Make Payment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அவ்வளவு தான் இதுபோல வீட்டு வரி ஆன்லைனில் செலுத்தலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |