போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி?

Advertisement

How to Pay Traffic Police Fine Online in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் போக்குவரத்து விதிமீறல்களால் பல விதமான பிரச்சனைகளும் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை தடுக்க போக்குவரத்து காவலர்களும் ஆங்காங்கே நின்று, ஆங்காங்கே நிறுத்தி பரிசோதனை செய்வதையும் பார்க்க முடிகிறது. புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகள் அமலாக்கப்பட்டன. புதிய விதிமுறைகளின் படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. சாலை விபத்துகளால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத விவரங்களை ஆன்லைனில் கண்டறிந்து பணம் செலுத்தும் முறையை போக்குவரத்துக்கு துறை அறிமுகம் செய்துள்ளது. ஆகவே இந்த பாவில் போக்குவரத்து அபராதத்தை ஆன்லைனில் கண்டறிந்து பணம் செலுத்துவது எப்படி? என்பதை பற்றி படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

How to Pay Traffic Police Fine Online in Tamil

ஸ்டேப்: 1

https://echallan.parivahan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

ஸ்டேப்: 2

அவற்றில் Challan Number என்பதில். தங்களது Challan Number டைப் செய்து அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள Captcha எண்ணினை உள்ளிட்டு get detail என்பதை கிளிக் செய்யுங்கள்.

How to Pay Traffic Police Fine Online in Tamil ஸ்டேப்: 3

ஒரு வேளை தங்களிடம் Challan Number இல்லாவிட்டால் Vehicle Number அதாவது உங்கள் பைக் நம்பரை உள்ளிடுங்கள், அதன் பிறகு Chassis Number Last 5 Characters அல்லது Engine No Last 5 Characters எண்ணினை உள்ளிட்ட வேண்டும்.

இறுதியில் அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள Captcha எண்ணினை உள்ளிட்டு get detail என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 4

ஒரு வேளை தங்களிடம் Vehicle Number-ம் இல்லாவிட்டால் DL நம்பர் அதாவது உங்களது டிரைவிங் லைசன் எண்ணினை உள்ளிட்டு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள Captcha எண்ணினை உள்ளிட்டு get detail என்பதை கிளிக் செய்யுங்கள்.

How to Apply Driving Licence Online in Tamil

How to Pay Traffic Police Fine Online in Tamil ஸ்டேப்: 5

மேலே கேட்கப்பட்ட விவரங்களை பதிவிட்டதும், செல்லான் விவரங்கள் திரையில் தோன்றும். சில சமயங்களில் வாகன பதிவு எண் மற்றும் லைசன்ஸ் நம்பர் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி செல்லான்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். இதனால் செல்லான் விவரங்களை அறிந்து கொள்ள இரண்டு வழிமுறைகளிலும் தேடுவது நல்லது.

ஸ்டேப்: 6

செல்லான் விவரங்களை அறிந்து கொண்டதும், பே நௌ என்ற பட்டனை கிளிக் செய்து ஆன்லைனில் பணம் செலுத்த துவங்கலாம்.

ஸ்டேப்: 7

பணம் செலுத்த மொபைல் நம்பரை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் முறையை பின்பற்ற வேண்டும். பின் இ செல்லான் பணம் செலுத்துவதற்கான வலைத்தளத்திற்கு செல்லலாம்.

ஸ்டேப்: 8

இனி பணம் செலுத்துவதை உறுதிப்படுத்தும் வலைப்பக்கம் திறக்கும். இங்கு புரொசீட் வித் நெட் பேமெண்ட் எனும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இதில் நெட் பேங்கிங், கார்டு பேமெண்ட் உள்ளிட்டவற்றில் ஒன்றை தேர்வு செய்து நீங்கள் எவ்வளவு அபராத தொகை செலுத்த வேண்டுமே அதனை அந்த அபராத தொகையை ஆன்லைன் மூலம் செலுத்துங்கள்.

செலுத்திய பின் challan payment has been received successfully என்று வரும் அவ்வளவு தாங்க ப்ராசஸ் சரியாக முடிந்தது.

 ஸ்டேப்: 9

இ செல்லான் மூலம் பணம் செலுத்தியும் பின் உங்களது status-ஐ check செய்து பாருங்கள் இதற்கு மீண்டும் இணையதளத்தின் முகப்புப்பக்கத்திற்கு செல்லுங்கள் Challan Number, Vehicle Number, DL நம்பர்இவகற்றில் ஏதேனும் ஒன்றை உள்ளிட்டு Captcha எண்ணினை உள்ளிட்டு get detail என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது status என்பதில் cash என்று என்று வந்திருக்கும்.

டிரைவிங் லைசென்ஸ் சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement