வீட்டில் இருந்தே தண்ணீர் வரியை ஆன்லைன் மூலம் செலுத்துவது எப்படி..?

Advertisement

How To Pay Water Tax Online

வாசகர்களுக்கு வணக்கம்..! நாம் தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த கால கட்டத்தில் அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. இன்றைய நிலையில் அனைவரின் உள்ளங்கையிலும் உலகம் உள்ளது என்று சொல்வதற்கு காரணமே போன் தான். இது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். சரி வாங்க நண்பர்களே வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் தண்ணீர் வரி செலுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Pay Water Tax Online in Tamil:

Step -1 

தண்ணீர் வரி ஆன்லைனில் செலுத்துவதற்கு tnurbanepay.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

Step -2

Quick Payment

அடுத்து ஒரு புதிய திரை தோன்றும். அதில் சில ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Quick Payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.

வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி

Step -3 

Water Supply

பின் Make Payment என்ற ஒரு புதிய திரை ஓபன் ஆகும். அதில் 5 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் இரண்டாவதாக Water Supply என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.

Step -4 

Connection Number

அடுத்ததாக ஒரு புதிய திரை ஓபன் ஆகும். அதில் Connection Number என்று ஒரு பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் தண்ணீர் வரி பில்லில் கொடுக்கப்பட்டிருக்கும் Connection Number -ஐ கொடுத்து கீழ் இருக்கும் Search என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Step -5 

பின் புதியதாக ஒரு திரை தோன்றும். அதில் நீங்கள் முன்னாடி கட்டிய தண்ணீர் வரியின் விவரங்கள் மற்றும் உங்களின் முகவரிகள் அனைத்து இருக்கும். அது அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து கொள்ளவும்.

வீட்டு வரி கட்டுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்

Step -6 

Payable Payment

பின் கீழே DCB Details என்று ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் கீழே Payable Payment என்ற இடத்தில் நீங்கள் எவ்வளவு தண்ணீர் வரி கட்ட வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருக்கும்.

Step -7

Payment Amount

அதை கீழ் இருக்கும் Payment Amount என்ற பாக்சில் நீங்கள் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதை கொடுத்து Submit கொடுக்க வேண்டும்.

Step -8

அடுத்து நீங்கள் பணத்தை எப்படி செலுத்த போகிறீர்கள் என்ற ஆப்சன் இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் Internet Banking மூலம் செலுத்த போகிறீர்கள் என்றால் அதை கிளிக் செய்து உங்கள் Bank இன் பெயரை கொடுத்து Make Payment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அவ்வளவு தான் இதுபோல வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் தண்ணீர் வரி செலுத்தலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement