Instagram பயன்படுத்துவதற்கு முன்னால் இதை படியுங்கள்..!

Advertisement

Instagram App Information in Tamil

ஹாய் நண்பர்களே..! இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே Whatsapp, Telegram மற்றும் Facebook போன்ற சமூக வலைத்தளங்களை  பயன்டுத்துகின்றோம். அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே Instagram செயலியை  பயன்படுத்துகிறோம்.

ஆனால் இந்த Instagram app முதன் முதலில் யாரால் அறிமுகபடுத்தப்பட்டது,  யாருக்காக உருவாக்கப்பட்டது போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரியாது. அவற்றையெல்லாம் பற்றி இன்றைய பதிவில் விரிவாக பார்க்க போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

இன்ஸ்டாகிராமில் உங்களுடைய Likes, Views யாருக்கும் காட்டாதபடி மறைக்க முடியும்

Instagram App Information in Tamil:

 Instagram in Tamil meaning

Instagram app என்பது அமெரிக்க நிறுவனமான Meta Platforms -க்குச் சொந்தமான புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு சமூக வலைப்பின்னல் சேவையாகும். இதனை முதன் முதலில் iOS -க்காக 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் Kevin Systrom மற்றும் Mike Krieger ஆகியோரால் தொடங்கப்பட்டது.

வேகமாக பிரபலமடைந்த இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களிலே இதில் 1 மில்லியன்  பயனாளர்கள் இருந்தனர். பின்னர் ஒரு வருடத்தில் 10 மில்லியன் மற்றும் ஜூன் 2018 -யில்  1 பில்லியன் பயனாளர்கள் இன்ஸ்டாகிராமில் இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் துவக்கத்தில் ஐ-போன், ஐ-பேடுகளில் மட்டுமே இருந்தது. அதன் பிறகு ஏப்ரல் 2012-ல் இருந்து தான் ஆண்ட்ராய்டு மொபைல் போனிலும்  இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிற்கு வந்தது.

ஏப்ரல் 12, 2012 அன்று Facebook நிறுவனம் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை, அதன் 13 பணியாளர்கள் உட்பட, ஏறத்தாழ $1 பில்லியன் பணம் கொடுத்து வாங்கியுள்ளது.

இதன் Fire Os பயன்பாடு ஜூன் 2014-இல் இருந்து தொடங்கப்பட்டது. Window 10 –க்கான பயன்பாடு அக்டோபர் 2016 -யிலுருந்து  தொடங்கப்பட்டது. அக்டோபர் 2015 நிலவரப்படி 40 பில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டன.

இந்த இன்ஸ்டாகிராம் ஆப்பினை ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

 Instagram பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement