நோக்கியாவின் புது ஸ்மார்ட்போன்!!!

தொழில்நுட்ப செய்திகள்

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News) – நோக்கியாவின் புது ஸ்மார்ட்போன் !!!

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News) – நோக்கியோ நிறுவனம் தற்பொழுது புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது 5 கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம்.

தொழில்நுட்ப செய்திகள் ஒப்போவின் புதிய வாக்கி டாக்கி..!

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News):-

நோக்கியா நிறுவனம் 9ப்யூர் வியூ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஸ்னாப்டிராகன 845 பிராசசர், பிளாக்ஷிப், பெண்டா கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில், நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன் பற்றி அறிவிக்கப்பட்டது.

இதில் பின்பக்கத்தில் பெண்டா கேமரா உள்ளதாக தகவல் வந்ததையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. பெண்டா கேமரா என்றால் ஐந்து கேமரா என்பதாகும்.

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 49,999/- ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் இப்போதே nokia.com மற்றும் flipkart.com ஆன்லைன் ஷாப்பிங்கில் நோக்கியா 9 ப்யூர் வியூ போனை வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

தற்சமயம் ஆன்லைனில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் 17ம் தேதிக்குப் பிறகு மற்ற மொபைல் ஷோரூம்களிலும் கிடைக்கும்.

தொடக்க விற்பனையாக வாடிக்கையாளர்களுக்கு சில ஆஃபர்கள், ப்ரோமோ கோடு வழங்கப்படுகிறது.

மேலும், HDFC வங்கியின் கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் நோக்கியா போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும், 9,999 ரூபாய் மதிப்புள்ள நோக்கியா 705 இயர் பட்ஸ், 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிப்ட் கார்டு ஆகியவையும் வழங்கப்படுகிறது.

QR Code மூலம் WIFI கனெக்ட் செய்வது எப்படி?

நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள்:

 1. பிராசசர்: ஸ்னாப்டிராகன் 845 சிப்
 2. இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
 3. பேட்டரி சக்தி: 3,320 mAh
 4. பிளாக்ஷிப் ஸ்போர்ட்ஸ்
 5. திரை அளவு: 5.99 இன்ச்
 6. டிஸ்ப்ளே: 2K POLED
 7. HDR 10 சப்போர்ட்
 8. விரல் ரேகை சென்சார்
 9. வயர்லஸ் சார்ஜிங்
 10. சார்ஜர்: 18W ஃபாஸ்ட் சார்ஜர்
 11. சிறப்பம்சம்: பெண்டா கேமரா
சுழல் கேமராவுடன் இந்தியாவுக்கு வரும் Asus 6Z ஸ்மார்ட்போன்!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!