Smart Phone Mistakes in Tamil..!
வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஏன்… குழந்தைகள் கூட இந்த ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்கள். ஸ்மார்ட் போன்களின் தேவை இன்று அதிகம் இருக்கிறது.
ஸ்மார்ட் போன்கள் வந்த உடன் மக்கள் மற்றவர்களிடம் முகம் கொடுத்து பேசுவதை கூட மறந்து விட்டார்கள். நாம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறோம் என்று சொல்வதை விட ஸ்மார்ட் போன்கள் தான் நம்மை பயன்படுத்துகிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போன்கள் நம் உலகில் இயங்கி கொண்டிருக்கிறது.
இருந்தாலும் ஸ்மார்ட் போன்களில் சில நன்மைகளும் உள்ளன. ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதால் நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அப்படி நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் நமக்கு தெரியாமலே சில தவறுகளை செய்கின்றோம். அதனால் நம்முடைய போன் சில நாட்களிலேயே சில கோளாறுகளை தருகிறது. அப்படி உங்கள் போனில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ ஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட 12 இரகசிய அம்சங்கள்..!
ஸ்மார்ட் போனில் செய்ய கூடாத தவறுகள் என்ன..?
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் நமக்கு தெரியாமலேயே சில தவறுகள் ஏற்படும். அதனால் போனில் சில பிரச்சனைகள் உண்டாகும். அதுபோல போனில் சில மாற்றங்கள் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இந்த தவறுகளை செய்யாதீர்கள்.
Step :1
உங்களுடைய மொபைலை அடிக்கடி சார்ஜ் (Charge) போடாதீர்கள். சார்ஜ் போடும் போது Charge முழுமையாக ஏறும் வரை போனை எடுக்க கூடாது. Charge ஏறி கொண்டிருக்கும் போதே போனை பாதியிலே எடுத்து பயன்படுத்த கூடாது. உதாரணமாக, சார்ஜ் ஏறி கொண்டிருக்கும் போது 100 % Charge ஏறும் வரை நிறுத்த கூடாது. முழுமையாக ஏறிய பின்னரே போனை எடுக்க வேண்டும்.
Step :2
பெரும்பாலும் சிலர் ப்ளூடூத் (Bluetooth) ஆன் (On) செய்தே வைத்திருப்பார்கள். அப்படி ஆன் செய்து வைத்திருப்பதால் உங்கள் போனில் உள்ள சார்ஜ் குறைய தொடங்கும். அதுமட்டுமின்றி ப்ளூடூத் மூலம் வைரஸ்கள் போனில் நுழையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதனால் இதை ஆன் செய்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.
Step :3
செல் போன்களை வெயில் படும் இடங்களில் வைக்க கூடாது. பொதுவாக செல் போன்கள் சார்ஜ் ஏறி கொண்டிருக்கும் போதே அதன் கீழ்ப்பகுதி சூடாக இருக்கும். அப்படி இருக்கும் போது வெயில் படும் இடங்களில் போனை வைக்கும் போது போனில் உள்ள சில பாகங்கள் செயலிழந்து விடும். அதனால் உங்கள் போன் விரைவாகவே பழுதாகிவிடும். அதுமட்டுமில்லாமல் போனில் உள்ள உதிரிபாகங்கள் செயலிழந்து உங்களுக்கு சில செலவுகளை ஏற்படுத்தும்.
Step :4
அதே போல உங்கள் போனில் லொகேஷன் (Location) என்ற ஆப்ஷனை ஆன் செய்து வைக்காதீர்கள். காரணம் Location ஆன் செய்து வைத்திருப்பதால் நீங்கள் பயன்படுத்தும் App -களின் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை அறியமுடியும். அதனால் இந்த தவறை செய்யாதீர்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |