வாட்ஸப்பில் யாருக்கும் தெரியாத டிப்ஸ் & ட்ரிக்ஸ் தெரிந்துகொள்வோமா..!

Whatsapp Tips and Tricks in Tamil

Whatsapp Tips and Tricks in Tamil

வணக்கம் நண்பர்களே.! வாட்ஸப்பில் உள்ள டிப்ஸ் & ட்ரிக்ஸ் தெரிய வேண்டும் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. இன்று அனைவரும் கையில் ஆண்ட்ராய்டு போன் உள்ளது. ஆண்ட்ராய்டு போன் உள்ள அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறோம். அதிக செலவில்லாமல் இண்டர்நெட் வசதி இருந்தால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையை வாட்ஸ்அப் செயலி  உருவாக்கியுள்ளது. இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா என்கின்றீர்களா..?இவையெல்லாம் தங்களுக்கு தெரிந்திருந்தாலும் வாட்ஸ்அப் குறித்து உங்களுக்கு டிப்ஸ் & ட்ரிக்ஸ் இருக்கின்றது. சரி வாங்க Tips and Tricks தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் ⇒ கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டிய 3 Android Tricks..!

WhatsApp Status Quotes Tricks in Tamil:

வாட்ஸ்அப்பில் போடும் ஸ்டேட்டஸ் பார்ப்போம். அந்த Status நமக்கு பிடித்திருக்கும் இல்லையென்றால் அதில் உள்ள வார்த்தைகள் பிடிக்கும். அதை பார்ப்பதற்கு நாம் அந்த இடத்தில் கை விரலை  வைத்து கொண்டே இருந்தால் தான் அந்த status நம்மால் பார்க்க முடியும். இனி அந்த பிரச்சனை இருக்காது. எப்படி என்று கேட்கிறீர்களா.

Whatsapp Status Quotes Tricks in Tamil

அதற்கு நீங்கள் எந்த Status பார்க்க வேண்டுமோ அந்த ஸ்டேட்டஸில் நம் கையின் மூன்று விரல்களை அழுத்தி எடுத்தால் போதும் அந்த ஸ்டேட்டஸை ஈசியா பார்க்கலாம்.

Contact Number Delete in Tamil:

உங்களுடைய நம்பரை ஒருத்தர் Delete பண்ணிருக்காங்களா என்பதை தெரிஞ்சிக்க முடியும். எப்படி என்பதை பார்ப்போம்.

Contact Number Delete in Tamil

WhatsApp open பண்ணி மேலே இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும். அதில் New Broadcast என்பதை கிளிக் செய்யவும். அதில் யார் உங்கள் நம்பரை Delete  பண்ணிருக்காங்க என்று நினைக்கிறிங்களோ அவர்களையும், இன்னொருவரையும் Add செய்யவும்.

Contact Number Delete in Tamil

இப்போது எதாவது Message பண்ணி பாருங்கள். நீங்கள் பண்ணிய Message அவர்களுக்கு Receive ஆகவில்லை என்றால் உங்கள் நம்பரை Delete செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துவிடலாம்.

WhatsApp Status Send to Contacts in Tamil:

நாம் வைத்திருக்கின்ற Status மற்றவர்களுக்கு வேணும் என்றால் send பண்ணா சொல்லுவார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள் Gallery-க்கு சென்று அந்த வீடியோ எங்கு  இருக்கும் என்று பார்த்து Send பண்ணுவீர்கள். இனி அந்த மாதிரி Send பண்ண வேண்டாம்.

Whatsapp Status Send to Contacts in Tamil

WhatsApp-ல் நீங்கள் வைத்திருக்கும் Status க்கு கிளிக் செய்யுங்கள். அதில் கீழே கண் போன்று இருக்கும். அதற்கு பக்கத்தில் Forward Option இருக்கும். அதை கிளிக் செய்து Status யாருக்கு Send பண்ண வேண்டுமோ ஈஸியா Send செய்யுங்கள்.

WhatsApp Chat Start in Tamil:

நீங்கள் உங்களுக்கு பிடித்த நபர் இல்லையென்றால்  Group Chat-ல் நாம் ஆரம்பத்தில் என்ன பேசினோம் பார்க்க நினைப்போம். அது ரொம்ப நாள் ஆகியிருக்கும். நீங்கள் Scroll பண்ணி பார்ப்பீர்கள். அப்படி கஷ்ட படாமல் பார்ப்பதற்கு எளிய வழி உள்ளது.

Whatsapp Chat Start in Tamil

நீங்கள் யாருடையதை பார்க்க வேண்டுமோ அந்த Chat-க்குள் செல்லுங்கள். அதில் மேலே மூன்று புள்ளி இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். அதில் Expert Chat கிளிக் செய்தால் நீங்கள் செய்த chat அனைத்தும் இருக்கும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News