Who Viewed My Whatsapp dp in Tamil
இன்றைய காலத்தில் போன் பயன்படுத்தாமல் யாரும் இல்லை. ஒரு வீட்டில் 5 நபர்கள் இருக்கின்றார்கள் என்றால் எல்லாரிடமும் போன் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை Smart Phone பயன்படுத்துகின்றனர். இந்த போனில் அதிகம் பயன்படுத்த கூடிய செயலியாக Whatsapp உள்ளது. இந்த வாட்சப்பில் பதிவிடுகின்ற ஸ்டேட்டஸை யாரெல்லாம் பார்த்திருக்கார்கள் என்று பார்ப்போம். அதே போல் Whatsapp டிபியை யாரெல்லாம் பார்த்திருக்கார்கள் என்பதை பார்க்க ஆசையாக இருக்கும். ஆனால் எப்படி என்று தான் தெரியாது.? உங்களது Whatsapp டிபியை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ வாட்ஸப்பில் யாருக்கும் தெரியாத டிப்ஸ் & ட்ரிக்ஸ் தெரிந்துகொள்வோமா..!
Who Viewed My Whatsapp dp in Tamil:
குறிப்பு: இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் ஆப் whataspp-ல் இருக்காது. இந்த ஆப்பை தனியாக பதிவிறக்க செய்ய வேண்டும். அதனால் இந்த ஆப்பை Download செய்வது உங்களின் தனிப்பட்ட விருப்பம்.
உங்களது WHATSAPP DP-யை யார் பார்த்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.
முதலில் உங்களது Smart போனில் play store-க்கு செல்ல வேண்டும். அதன் பின் WhatsBox – Spice Up என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்த பிறகு நிறைய Option இருக்கும். ஆனால் நீங்கள் முதலில் இருக்கும் Power Feature என்பதை கிளிக் செய்யவும்.
அதை கிளிக் செய்தவுடன் நிறைய Option இருக்கும். அதில் முதலில் இருப்பது ஸ்டேட்டஸ் Download என்று இருக்கும். இதை பயன்படுத்தி உங்கள் நண்பர்கள் வைத்திருக்கும் ஸ்டேட்டஸை நீங்கள் Download செய்து கொள்ளலாம்.
அடுத்து Cleaner என்ற Option இருக்கும். இதை பயன்படுத்தி உங்களது Whatapp-ல் இருக்கும் தேவையில்லாததை Delete செய்யலாம்.
அடுத்து who is online என்ற Option இருக்கும். அதை பயன்படுத்தி உங்களது நண்பர்கள் Online-ல் இருக்கிறார்களா..! மற்றும் எவ்வளவு நேரத்திற்கு முன்னாடி Online வந்திருந்தார்கள் என்ற முழு தகவலை தெரிந்துகொள்ளலாம்.
அடுத்து அதில் கடைசியாக who viewed my profile என்ற Option இருக்கும். இதை பயன்படுத்தி தான் உங்களது DP -யை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த Option-யை கிளிக் செய்தவுடன் உங்களது dp-யை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்களோ அவர்களின் பெயர்கள் வரிசையாக இருக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |