நீங்கள் எழுந்து போனால் உங்கள் லேப்டாப் அதுவே லாக் ஆகிடுமா..? அது எப்படி ஆகும்..!

windows automatic lock screen tricks in tamil

Windows Automatic Lock Screen Tricks in Tamil

ரகசியங்களை மனதில் மறைத்து வைப்பதை விட, போன் மற்றும் லேப்டாப்பில் மறைத்து வைக்க தான் அதிகமாக கஷ்டப்படுவோம். நாம் முக்கியமாக யாருக்கும்  தெரியாமல் வைக்க தான் அதிகம் கஷ்டப்படுவோம். இப்போது அதிகமாக மக்கள் விரும்புவது போன் என்று சொல்லலாம். ஏனென்றால் அனைவருமே சமூக வலைத்தளங்களில் அவர்களின் நேரத்தை செலவு செய்கிறார்கள்.

Windows Automatic Lock Screen Tricks in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சமூக வலைதங்களில் ரீலிஸ் மற்றும் நகை சுவை வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார்கள் அதனை சரியாக பதிவு செய்ய அனைவரின் கையிலும் இப்போது லேப்டாப் உள்ளது. அதில் நாம் நிறைய ரகசியங்களை மறைத்து வைத்திருப்போம். அவ்வளவு ஏன் நம்முடைய அனைத்து விவரங்களும் அதில் தான் வைத்திருப்போம்.

அதை நாம் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்துவது வழக்கம். அப்படி பயன்படுத்தும் போது உங்களுக்கு போன் வருகிறது என்றால் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டால் உங்களுடைய விவரங்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம். இனி கவலையை விடுங்க. நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு எழுந்து சென்று விட்டால் உங்கள் லேப்டாப் அதுவே லாக் ஆகிடும். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்..!

ஸ்டேப்: 1

முதலில் உங்கள் போனை System –ல் உள்ள Bluetooth உடன் Pair செய்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

அதன் பின்பு செட்டிங் Settings செல்லவும்.

ஸ்டேப்: 3

அடுத்து அதில் ACCOUNTS என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 4 

பின்பு புதிதாக திரை தோன்றும் அதில் Sign-in-Option என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்: 5

அதில் Dynamic Lock உள்ளதா, அதற்கு கீழ் Allow Windows to Automatically Lock Your Device When You’re Away என்பதை Enable கொடுத்துவிட்டு நீங்கள் எழுந்து சென்றால் அவ்வளவு தான் உங்கள் லேப்டாப் அதுவே OFF ஆகிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Google Chrome ஆப்பில் இந்த Settings எல்லாம் ON -ல இருந்தா அதை உடனே OFF செஞ்சி வச்சிடுங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்