பிரசவத்திற்கு பின் அதிகரிக்கும் உடல் எடையை குறைக்க அருமையான டிப்ஸ்

Advertisement

பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஒரு அருமையான பதிவு பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். அதாவது பிரசவத்திற்கு பின் அதிகரிக்கும் உடல் எடையை குறைப்பதற்கான அருமையான டிப்ஸ் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம், பொதுவாகவே பெண்களுக்கு திருமணம் ஆன சில வருடங்களில் குழந்தை பிறந்துவிடுக்கிறது, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை கவனித்து கொண்டு அவர்களின் உடல் நிலையை பற்றி அறிவதில்லை, இது போன்ற காரணங்களினாலும், அலட்சிய போக்கினாலும் உடல் எடை அதிகரிக்கிறது, உடல் எடையை குறைப்பதற்கு நம் பதிவில் குறிப்புகளை காணலாம் வாங்க.

உடற்பயிற்சி இல்லாமல் 10 நாளில் நிரந்தரமாக உடல் எடை குறைய டிப்ஸ்

பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்க காரணம்:

உடல் எடைகள் அதிகரிப்பது இன்றிய காலத்தில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம் நாம் சாப்பிடும் உணவுகளும், நமது வாழ்க்கை முறைகளுமாகும். இதுவே உடல் எடையை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

சில பெண்களுக்கு திருமணம் ஆனதும் உடல் எடை அதிகரிக்கிறது, அதோடு அவர்கள் கருவை சுமக்கும் பொழுது உடல் எடை இன்னும் அதிக அளவில் அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் தொப்பை போன்ற பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கிறார்கள்.

பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்க காரணம் ஒரு சிலர்க்கு சிசேரியன் செய்து குழந்தை பிறக்கும் இவர்களுக்கு தான் அதிகமாக தொப்பை காணப்படும், நார்மல் டெலிவரியில் குழந்தை பெற்றவர்களுக்கு பிறப்புறுப்பில் காற்று செல்வத்தினால் வயிறும் உடலும் அதிக எடையுடன் காணப்படுகிறது. இது போன்ற காரணங்களினால் உடல் எடை அதிகரிக்கிறது.  குழந்தை பேரினால் பெண்களின் உடல் எடை அதிகரிப்பது மட்டும் அல்லாமல், உடலில் பல்வேறு மாற்றங்களும் ஏற்படுகிறது.

பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய வழிகள்:

உணவு முறை:

பிரசவமான பெண்கள் உடல் எடையை குறைப்பதற்கு காலை உணவுகளில் மீல், ஓட்ஸ், பழங்கள் போன்ற உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. இவை அனைத்தும் குறைந்த கலோரிகளை கொண்ட உணவுகள் ஆகும், இவற்றை சாப்பிடுவதால் வயிறும் நரம்பு, தொப்பையும் குறைந்து விடும்.

மதியம் சாப்பிடும் பொழுது புரத சத்துக்கள் நிறைந்த முட்டை, பருப்பு, பச்சை காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. இரவு உணவுகளில் பழங்கள், சர்க்கரை வள்ளி கிழங்கு போன்ற உணவுகளை சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கிறது.

உடற்பயிற்சி: 

பிரசவத்திற்கு பின் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு உடல் பயிற்சிகளை செய்வது நல்லது. தினமும் நடை பயிற்சி செய்து வந்தால் உடல் எடை வேகமாக குறைந்துவிடும், அதோடு சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்வதினால் உடல் எடை குறைந்து, உடல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் மாறிவிடும்.

தாய்ப்பால் கொடுப்பது:

உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர தினமும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுது ஒரு நாளைக்கு 2000 முதல் 2500 மேல் கலோரிகள் எரிக்கப்படுகிறது.

தவிர்க்க வேண்டியவை:

கர்ப்ப காலத்தில் அதிகமான கொழுப்பு சேர்ந்த உணவுகள், எண்ணெய்கள், துரித உணவுகள், பேக்கரி உணவுகள், நொறுக்கு தீனிகள், பாக்கெட் உணவுகள், உடனடி தயாரிப்பு உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள், செயற்கை குளிர்பானங்கள் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது, ஏனென்றால் பிரசவக்காலத்தில் இது போன்ற உணவுகளை எடுப்பதால் உடலில் அதிக கொழுப்புகள் சேர்வதற்கு வாய்ப்பாக உள்ளது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil

 

 

Advertisement