பெண்கள் நீங்கள் எந்த மாதிரியான ஆடை அணிந்திருந்தாலும் இதை மட்டும் செய்து விட்டால் அழகாக இருப்பீர்கள்.!

Advertisement

தோடு மாடல்

வணக்கம் நண்பர்களே.! பெண்கள் அழகுக்கு முக்கியதுவம் கொடுப்பார்கள். மேக்கப் போடுவது அழகுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் மேக்கப் மட்டும் போட்டால் அழகாக இருக்க மாட்டீர்கள். உங்களின் உடை ஒரு காரணமாகவும், உங்களின் முகத்தை அழகாக எடுத்து காட்டுவதற்கு தோடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இந்த தோட்டை எந்த உடைக்கு எந்த தோடு அணிகிறீர்கள் என்பது முக்கியமானது. உங்களுக்கு உதவும் வகையில் எந்த ஆடைக்கு எந்த தோடு போட வேண்டும் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

புடவை கட்டினால்:

தோடு மாடல்

புடவை  பலருக்கும் பிடித்தமான உடை என்று சொல்லலாம். புடவையை மட்டும் அழகாக கட்டினால் போதுமா.! உங்களின் முகத்தை பிரகாசிக்க தோடு முக்கியமாக விளங்குகிறது. புடவை உடையை உடுத்த விரும்பினால் நீங்கள் தோடு ஜிமிக்கி அணிவது சிறந்தது. அதிலும் புடவை கலருக்கு தோடு ஜிமிக்கி அணிந்தால் அழகாக இருக்கும்.

சுடிதார் அணிவது எப்படி.?

தோடு மாடல்

நீங்கள் சுடிதார் அணியும் போது அதற்கு தகுந்தது போல் தோடு அணிவது முக்கியமானது. நீங்கள் சுடிதார் அணியும் போது நீங்கள் எந்த மாதிரியான தோடுகளை வேண்டுமானாலும் தோடையும் அணியலாம். ஆனால் அந்த தோட்டை சுடிதார் கலராக அணிய வேண்டும். கொஞ்சம் மாடர்னாக அணிய வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ பெண்கள் தோடு மற்றும் மூக்குத்தி அணிவதற்கான இரகசியம் தெரியுமா.?

பாவடை சட்டை:

தோடு மாடல்

பாவாடை சட்டை  குழந்தைகள் தான் அதிகமாக அணிவார்கள். அப்போது குழந்தைகளுக்கு தோடு ஜிமிக்கி போட்டு விட வேண்டும். அப்போது தான் அழகாக இருக்கும்.

ஜீன்ஸ் ஆடை அணிந்தால்:

தோடு மாடல்

ஜீன்ஸ் ஆடை அணிந்தால் சில்வர் வளையம் தோடு அல்லது கொக்கி தோடு அல்லது பட்டன் தோடு அணிய வேண்டும்.

குர்தா ஆடை அணிந்தால்:

தோடு மாடல்

பெண்கள் குர்தா ஆடை அதிகமாக அணிவார்கள். நீங்கள் குர்தா ஆடை அணியும் போது பெரிய தோடாக அணிய வேண்டும். அதிலும் சில்வர் மெட்டலாக அணிந்தால் அழகாக இருக்கும்.

பிளாசோ ஆடை அணிந்தால்:

தோடு மாடல்

இப்பொழுது பெண்களிடம் பிளாசோ நல்ல வரவேற்பை பிடித்திருக்கிறது. அதனால் இந்த ஆடையை அணியும் பொழுது வளையம் வைத்து ஜிமிக்கி அணிவது சிறந்தது.

பாவாடை தாவணி ஆடை: 

தோடு மாடல்

நீங்கள் பாரம்பரியமான பாவாடை தாவணி அணிந்தால் தோடு ஜிமிக்கி அணிந்து கொள்ளுங்கள். அதுவே கொஞ்சம் மாடர்னாக பாவடை தாவணி அணிந்தால் கொஞ்சம் மாடர்னாக தோடாக அணிந்து கொள்ளுங்கள்.

லெஹெங்கா ஆடை அணிந்தால்:

தோடு மாடல்

நீங்கள் லெஹங்கா ஆடை அணிந்தால் பெரிய தோடாக அனைத்து கொள்ள வேண்டும். உடை நிறத்துக்கு தோடு அணிந்து கொள்ளலாம். இல்லையென்றால் சில்வர் மெட்டல் தோடு அணிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் ⇒ தங்கம் வாங்க போகிறீர்களா..! அப்போ இதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்

பெண்கள் சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்

 

Advertisement