பெண்கள் தோடு மற்றும் மூக்குத்தி அணிவதற்கான இரகசியம் தெரியுமா.?

Advertisement

பெண்கள் மூக்குத்தி அணிவது ஏன்.?

பெண்களுக்கு நகை என்பது மிகவும் பிடித்தமானது. ஆனால் பெண்கள் எந்த நகை போடாமலிருந்தாலும் அவர்களின் முகத்தில் காதில் தோடு, மூக்குத்தி இல்லாமல் இருக்காது. தோடு போடுவது ஆண்கள் பெண்கள் இருபாலரும் அணிந்துகொள்வார்கள். தோடு மற்றும் மூக்குத்தி அணிவது பழக்கமாக இருந்தாலும்  இதற்கும் அறிவியல் காரணமும் இருக்கிறது. அது என்னென்ன என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ பெண்கள் தாலி அணிவதில் ஒளிந்திருக்கும் இரகசியம் தெரியுமா.?

தோடு அணிவதற்கான காரணம்:

இன்றைய உலகத்தில் எவ்வளவு மாறியிருந்தாலும் காது குத்தும் பழக்கம் இன்று வரை மாறாமல் தான் இருக்கிறது. காரணம்  நம் காது மடல்களிலுருந்து மூளைக்கு நரம்பு செல்கிறது. அதனால் காது குத்தும் போது நரம்புகள் தூண்டப்பட்டு கண் பார்வை திறனை அதிகரிக்கிறது. உடலின் வெப்ப நிலையை குறைக்கிறது.  

பெண்கள் மூக்குத்தி அணிவதற்கான காரணம்:

பெரும்பாலானவர்கள் இடது பக்கத்தில் தான் மூக்குத்தி அணிவார்கள். இதற்கு காரணம் வலது பக்க மூளையை நன்றாக செயல்பட வைக்கும். அதுவே நீங்கள் வலது பக்கம் மூக்கு குத்தினால் இடது பக்கம் உள்ள மூளையை நன்றாக செயல்பட வைக்கும்.

நெற்றி பகுதியில் நரம்புகள் மூக்கின் வழியாக வரும். அப்பொழுது நரம்பின் மீது மூக்கு குத்தி தங்கம் அணிவதால் நம் உடலில் உள்ள வெப்பத்தை குறைக்கும்.

 மேலும் பெண்களுக்கு ஏற்பட கூடிய சளி, ஒற்றை தலைவலி, மூக்கு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவை நீங்கும். அதுமட்டுமில்லாமல் கண் பார்வை திறனை அதிகரிக்கும். முக்கியமாக பெண்கள் மூப்படைந்த பிறகு தான் மூக்கு குத்துவார்கள். அப்பொழுது பெண்களின் தலை பகுதியில் சில வாயுக்கள் காணப்படும். இந்த வாயுக்களை வெளிப்படுத்தவே பெண்களுக்கு மூக்கு குத்தப்படுகிறது. மேலும் ஞாபக சக்தியை அதிகப்படுத்துகிறது.  

குறிப்பாக பெண்கள் இடது பக்கத்தில் தான் மூக்குத்தி குத்த வேண்டும். நீங்கள் இது நாள் வரையிலும் காதில் தோடு அணிவது, மூக்குத்தி அணிவது பண்பாடு பழக்கம் என்று தானே நினைத்து கொண்டீர்கள். நம் முன்னோர்கள் உண்மையான காரணத்தை சொன்னால் யாரும் கடைபிடிக்க மாட்டீர்கள் என்று தான் ஆன்மிக அடிப்படையில் செய்ய வைக்கிறார்கள்.

பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காதில் தோடு மற்றும் மூக்குத்தி அணியுங்கள்.

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement