பெண்கள் குண்டாக இருக்க இது தான் முக்கியமான காரணம்! இந்த தப்பை இனிமேல் செய்யாதீர்கள்..!

Advertisement

பெண்கள் குண்டாக இருக்க என்ன காரணம் | What Causes Women’s Belly Fat in Tamil

உடல் எடை அதிகரிக்க பலவகையான காரணங்கள் உள்ளது.. 2014-யில் செய்த ஆய்வில் உலகில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக உடல் பருமனை கொண்டுள்ளாராம். இந்த உடல் பருமன் ஒருவருக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், பல வகையான புற்றுநோய்கள், இதய நோய், பக்கவாதம், கருவுறுதலில் பிரச்சனை பலவகையான கோளாறுகளை ஏறுபடுத்தலாம். சரி வாங்க இந்த பதிவில் பெண்கள் குண்டாக இருக்க எது முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை பற்றி இப்பொழுது படித்தறியலாம்.

மருந்து, மாத்திரைகள்:

மனம் அழுத்தத்திற்க்காக எடுத்து கொள்ளும் மாத்திரைகள், ஸ்டீராய்டுகள், நீரிழிவு மருந்துகள் போன்றவற்றை எடுத்துக்கொள்வதினால் உடல் எடை அதிகரிக்க காரணமாக அமையும். எனவே இந்த மருந்துகளை எடுப்பதற்கு முன்பாக மருத்துவரிடம் கூடுதலாக ஒரு முறை ஆலோசனை பெறுவது நல்லது.

மரபணு சார்ந்த பிரச்சனைகள்:

சிலருக்கு மரபு சார்ந்த உடல் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதாவது உங்கள் பெற்றோர்கள் உடல் பருமனாக இருந்தால் நீங்களும் உடல் எடை அதிகமாக தான் இருப்பீர்கள்.

அதிக பசியை தூண்டும் ஹார்மோன்கள்:

உடலின் மொத்த இயக்கங்களுக்கும் ஹார்மோன்கள் முக்கிய பங்குவக்குகிறது. அந்த வகையில் அதிக பசியைத் தூண்டும் ஹார்மோன்களால் அதிகம் உணவு எடுத்துக்கொள்ளும்போது உடல் பருமன் ஏற்படுகிறது.

மன அழுத்தம்:

பொதுவாக மனிதர்களுக்கு இருக்க கூடிய பபிரச்சனைகளான மன அழுத்தம், இரவில் தூக்கமின்மை போன்ற பொதுவாக காணப்படும் பிரச்சனைகளால் கூட உடல் எடை  அதிகரிக்கும்.

இந்த நிலையம் கிளிக் செய்து படியுங்கள் 👇
கருப்பையை பிரச்சனைகளை சரி செய்ய இந்த 3 பழங்கள் போதும்.!

மது அருந்துதல்:

அதிகப்படியான மது அருந்துதல், அதிகம் சர்க்கரை சுவை நிறைந்த பானங்களை அருந்துவதினால் கூட  உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

உடல் இயக்கமின்மை:

உடல் அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது உடல் இயக்கமின்மை தான். உடல் இயக்கமின்மை. துரித உணவுகளை அதிகமாக உட்கொள்வதுடன் உடற்பயிற்சி செய்ய முற்படாததால் உடலில் கொழுப்பு படிகிறது. உடல் இயக்கமின்மையால் உடல் பருமன் ஏற்பட வழிவகுக்குகிறது.

பெண்கள் சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்
Advertisement