ஆழ்வார்களின் பெயர்கள் | Alwargal Names in Tamil

Alwargal Names in Tamil

12 ஆழ்வார்கள் பெயர்கள் தமிழில் | 12 Alwargal Names in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களை பார்க்கலாம். ஆழ்வார்கள் என்பவர்கள் தம்முடைய பாசுரங்களால் வைணவ கடவுளான திருமாலின் பெருமையை போற்றியவர்கள். தமிழின் பெருமையையும், திருமாலின் சிறப்புகளையும் உலகிற்கு உணர்த்தியவர்கள். இவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு தான் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. நாம் இந்த பதிவில் ஆழ்வார்களின் பெயரையும், அவர்கள் பற்றிய சிறு குறிப்பையும் படித்தறியலாம் வாங்க.

ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?

 • ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரண்டு பேர்.

ஆழ்வார்களின் பெயர்கள்:

 1. பொய்கையாழ்வார்
 2. பூதத்தாழ்வார்
 3. பேயாழ்வார்
 4. திருமழிசையாழ்வார்
 5. நம்மாழ்வார்
 6. மதுரகவி ஆழ்வார்
 7. குலசேகர ஆழ்வார்
 8. பெரியாழ்வார்
 9. ஆண்டாள்
 10. தொண்டரடிப்பொடியாழ்வார்
 11. திருப்பாணாழ்வார்
 12. திருமங்கையாழ்வார்

முதல் ஆழ்வார்கள் யார்?

12 Alwars Names List in Tamil: பன்னிரு ஆழ்வார்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதல் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றன.

பொய்கையாழ்வார்:

12 ஆழ்வார்கள் பெயர்கள் in tamil

 • Panniru Alwargal Names in Tamil: பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்ற சிறப்பினை உடையவர். காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்னுமிடத்தில் உள்ள பொய்கையில் பிறந்தார். பொய்கையில் பிறந்ததால் இவரை பொய்கையாழ்வார் என்று அழைக்கிறார்கள்.
 • இவருடைய காலம் 7-ம் நூற்றாண்டு. இவர் 1-ம் தேதி ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தார்.

பூதத்தாழ்வார்:

Panniru Alwargal Names in Tamil:

 • முதல் ஆழ்வார்களுள் இவர் இரண்டாவ்து ஆழ்வார் ஆவார். இவர் பொய்கை ஆழ்வாரின் காலத்தவர். இவர் ஐப்பசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் திருமாலின் கையில் உள்ள கௌமோதகி என்ற கதையின் அம்சமாவார். உலக வாழ்க்கையில் இன்பத்தை துறந்து திருமால் மேல் அதிக பக்தி கொண்டவர்.

பேயாழ்வார்:

12 alwars names list in tamil

 • Alwargal Names in Tamil: இவர் முதல் ஆழ்வார்களுள் மூன்றாம் ஆழ்வார். மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் செவ்வல்லி மலரில் பிறந்தவர். திருமாலின் நந்தகம் எனும் வாளின் அம்சமாவார். இவருடைய காலம் கி.பி 7-ம் நூற்றாண்டு, இவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.

திருமழிசையாழ்வார்:

ஆழ்வார்களின் பெயர்கள்

 • ஆழ்வார்களின் பெயர்கள்: திருமழிசை என்னும் இடத்தில் பிறந்தார். தை மாதம் பிறந்தார், இவருடைய நட்சத்திரம் மகம். கணிக்கண்ணன் என்பவரை சீடராக கொண்டு அவருடன் திருவெஃகா சென்று யதோத்தகாரிப் பெருமானை வணங்கி தியானம் மேற்கொண்டார். இவர் பெருமாளின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சத்தை பெற்றுள்ளார்.
 • இவர் நான்முகன் திருவந்தாதி என்ற நூறு பாடல்களையும், திருசந்த விருத்தம் என்ற 120 விருத்தங்களைக் கொண்ட பாடல்களையும் பாடியுள்ளார்.

நம்மாழ்வார்:

Alwargal Names in Tamil

 • Alwargal Names in Tamil: தூத்துக்குடி மாவட்டத்தில் திருக்குருகூர் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய காலம் கி.பி 9-ம் நூற்றாண்டு. இவர் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் பிரமாதி ஆண்டு பிறந்தார். இவர் பிறந்து சில நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததால் சடகோபன் என்று அழைக்கப்பட்டார். இவர் திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனர் என்பவரின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
 • திவ்யபிரபந்தம் இடைப்பட்ட காலத்தில் உபயோகத்தில் இல்லை என்றும், திருநாத முனிகள் தவத்தை மேற்கொண்டு, நம்மாழ்வாரை யோக நிலையில் தொடர்பு கொண்டு பாசுரங்களை மீண்டும் கோவில்களில் பாடியதாக கூறுவார்.
 • நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, பெரியதிருவாய்மொழி போன்ற பாடல்களை இயற்றியுள்ளார். இதில் திருவாய்மொழி வைணவத்தின் பொக்கிஷம் ஆகும். திருவாய்மொழியில் 1102 பாசுரங்கள் உள்ளது.
108 திவ்ய தேசங்கள்

மதுரகவி ஆழ்வார்:

ஆழ்வார்களின் பெயர்கள்

 • ஆழ்வார்களின் பெயர்கள்: வைணவ சமயத்தை பின்பற்றி வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்களுள் இவரும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டத்தில் திருக்கோவிலூர் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு. இவர் சித்திரை நட்சத்திரத்தில், சித்திரை மாதம் பிறந்தார்.
 • ஒரு நாள் பூஜை செய்து கொண்டிருக்கும் போது பெரிய ஒளி ஒன்று மதுரகவி ஆழ்வாரை, நம்மாழ்வார் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றது. மதுரகவி ஆழ்வார் தன்னுடைய திறமையால் பேசாதிருந்த நம்மாழ்வாரை பேச வைத்தார்.
 • மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் பக்தியை கண்டு தனது குருவாக ஏற்று கொண்டார். பின் நம்மாழ்வாருக்கு கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களை பாடியுள்ளார்.
 • கோவிலில் நம்மாழ்வார்க்கும், ஸ்ரீமந் நாராயணனுக்கும் பூஜை செய்து, பாடல்கள் பாடி இறைவனிடம் சேர்ந்தார்.

குலசேகர ஆழ்வார்:

12 ஆழ்வார்கள் பெயர்கள் in tamil

 • 12 Alwargal Names in Tamil: இவர் சேர நாட்டில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இவருடைய காலம் 8-ம் நூற்றாண்டு. இவருடைய அம்சமாக இருப்பது கௌஸ்துபம். இவர் வடமொழி, வில், வாள் பயிற்சி போன்றவற்றை சிறப்பாக கற்றவர். இவருடைய வீரத்தை பார்த்த பாண்டிய மன்னன் தனது மகளை குலசேகர ஆழ்வாருக்கு கட்டி வைத்தார்.
 • குலசேகர ஆழ்வாரும் இல்லற வாழ்க்கையிலும், போர் முறையிலும் சிறந்து விளங்கினார். இந்த உலகம் இன்பம் நிலையற்றது என்பதை ஸ்ரீமந் நாராயணன் எடுத்துரைத்த பிறகு, இல்லற வாழ்க்கையை துறந்து இறைவழிபாட்டில் மனதை செலுத்தினார்.
 • திருமால் மீது பாடிய பாசுரங்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படுகிறது. இந்த திருமொழியில் 105 பாசுரங்கள் உள்ளது.
சிவன் பெயர்கள் பட்டியல்

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.Pothunalam.com