தமிழ்ப் பருவப்பெயர்கள் | Paruvam Names in Tamil

Paruvam Names in Tamil

பருவங்கள் வகைகள் | Paruva Kaalam Peyargal in Tamil

தமிழ்மொழி என்றாலே மிகவும் சிறப்பு வாய்ந்த மொழி என்றே சொல்லலாம். தமிழ் மொழியில் வாழ்க்கைக்கு தேவையான குறிப்பேடுகள், வரலாற்று சுவடுகள், இலக்கண வகைகள், அறிவை மேம்படுத்த போன்ற பல வகையான தமிழ்மொழியில் சிறப்புகள் அடங்கியுள்ளது. தமிழ்மொழிக்குள் பல சிறப்புகளில் சொற்சிறப்பும் ஒன்று. தமிழ்மொழியிலுள்ள பருவப்பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். தமிழ்மொழி பருவங்களில் ஆண்களுக்கு தனி பருவ பெயர்கள், பெண்களுக்கு தனி பருவ பெயர்கள், மலர்களுக்கு, காலத்திற்கேற்ப பருவ களம் என்று தனித்தனியாக அமைந்துள்ளது. வாங்க பருவங்களின் பெயர்களை படித்து தெரிந்துகொள்ளலாம்..

எட்டு காலங்கள்

ஆண் பருவ பெயர்கள்:

ஆண்களின் வயது பருவகாலம் 
1 -12 வயதுபாலகன்
12 -24 வயதுவிடலை
24 – 36 வயதுகாளை
36 – 48 வயதுமீளி
48 – 60 வயதுமறவோன்
60 – 72 திறவோன்
72 வயதுக்கு மேல் முதுமகன் 

பெண் பருவ பெயர்கள்:

பெண்களின் வயது பருவகாலம் 
1 வயது முதல் 8 வயது வரைபேதை 
 9 வயது முதல் 10 வயது வரைபெதும்பை
11 வயது முதல் 14 வயது வரைமங்கை
15 வயது முதல் 18 வயது வரைமடந்தை
19 வயது முதல் 24 வயது வரைஅரிவை
25 வயது முதல் 29 வயது வரைதெரிவை
30 வயதுக்கு மேல்பேரிளம் பெண்

தமிழரின் பருவ காலங்கள்:

காலம் வகைகள் பருவகாலம் 
கார்காலம் ஆவணி, புரட்டாசி 
கூதிர்காலம் ஐப்பசி, கார்த்திகை 
முன்பனிக்காலம் மார்கழி, தை 
பின்பனிக்காலம்  மாசி, பங்குனி
இளவேனில்காலம் சித்திரை, வைகாசி
முதுவேனில்காலம் ஆனி, ஆடி

 

ஐவகை நிலங்கள்

பிற பட்டியலின் பருவகாலம்:

பிற பட்டியல் பெயர் பருவகாலம் 
பிள்ளை குழந்தைப்பருவம்
சிறுவன் பாலப்பருவம்
பையன் பள்ளிப்பருவம்
காளை காதற்பருவம்
தலைவன் குடும்பப்பருவம்
முதியோன் தளர்ச்சிப்பருவம்
கிழவன் மூப்புப்பருவம்

மலர்களின் பருவகாலம்:

மலர் வகை பருவகாலம் 
அரும்பு அரும்பும்நிலை
மொட்டு மொக்குவிடும்நிலை
முகை முகிழ்க்கும் நிலை
மலர் பூநிலை
அலர் மலர்ந்தமநிலை
வீவாடும்நிலை
செம்மல் இறுதிநிலை

இலைகளின் பருவகாலம்:

இலை வகை பருவகாலம் 
கொழுந்து குழந்தைப்பருவம்
தளிர் இளமைப்பருவம்
இலை காதற்பருவம்
பழுப்பு முதுமைப்பருவம்
சருகு இறுதிப்பருவம்

 

பெயர்கள் சம்மந்தமான பதிவுகளை செறிந்து கொள்ள இந்த  லிங்கை கிளிக் செய்யவும் —>பேபி நேம் தமிழ்