ராஜராஜ சோழன் வேறு பெயர்கள் | Raja Raja Cholan Other Names in Tamil

Raja Raja Cholan Other Names in Tamil

ராஜராஜ சோழன் பெயர்கள் | Raja Raja Cholan Names in Tamil

மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது தான் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில். அந்த கோவிலுக்கு தினம்தோறும் மக்கள் கூட்டம் வந்துகொண்டுதான் இருக்கிறது. விசயாலய சோழன் பின்வந்த சோழர்களின் சோழப் பேரரத்தை சிறப்புற அமைத்து நிலைபெறச் செய்த பேரரசன் இராசராசன் ஆவார். இவருடைய ஆட்சி காலத்தில் ஓவியம், சிற்பம், நாடகக்கலை, நடனம், இசை, இலக்கியம் போன்றவை நன்கு வளர ஆரம்பித்தன. மாமன்னன் ராஜராஜ சோழனின் பெரும்பாலான கல்வெட்டுகள் அருமொழி எனக் குறிப்பிடுகின்றன. தஞ்சைப் பெரிய கோயிலின் இரண்டாம் வாயிலான ராஜராஜன் கோபுர வாயில் கல்வெட்டில் அருண்மொழி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜ ராஜ சோழனை மொத்தம் 42 பெயர்களால் அழைத்து வருகிறார்கள். அந்த பெயர் பட்டியலை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

தமிழ் மன்னர்களின் பெயர்கள்

ராஜராஜ சோழன் வேறு பெயர்கள்:

இராசகண்டியன் இராசசர்வக்ஞன்
இராசராசன் இராசகேசரிவர்மன்
இராசாச்ரயன் இராசமார்த்தாண்டன்
இராசேந்திரசிம்மன் இராசவிநோதன்
இரணமுகபீமன் இரவிகுலமாணிக்கன்
இரவிவம்சசிகாமணி அபயகுலசேகரன்
அருள்மொழி வர்மன் அரிதுர்க்கலங்கன்
பெரியபெருமாள் அழகியசோழன்
மும்முடிச்சோழன் பண்டிதசோழன்
நிகரிலிசோழன் திருமுறைகண்டசோழன்

 

செயங்கொண்டசோழன் உத்தமசோழன்
மூர்த்தவிக்கரமாபரணன் உத்துங்கதுங்கன்
உய்யக்கொண்டான் உலகளந்தான்
தெலிங்ககுலகாலன் கேரளாந்தகன்
மூர்த்தவிக்கரமாபரணன் சோழேந்திரசிம்மன்
சோழநாராயணன் சோழகுலசுந்தரன்
சோழமார்த்தாண்டன் பாண்டியகுலாசனி
சிவபாதசேகரன் சிங்களாந்தகன்
சத்துருபுஜங்கன் சண்டபராக்ரமன்
ஜனநாதன் சத்திரியசிகாமணி
கீர்த்திபராக்கிரமன் தைலகுலகாலன்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com