Aciloc 150 mg Tablet Uses in Tamil
இன்றைய காலகட்டத்தில்சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கை முறையினாலும் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்படி அதிகரித்துள்ள நோய்களை குணப்படுத்த உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இப்பொழுது உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் நீங்கள் அருகில் உள்ள மருந்து கடையில் சென்று மருந்து வாங்கி உட்கொள்கிறீர்கள் என்றாலும் அதனை பயன்படுத்துவதற்கு முன்னால் அந்த மருந்தினை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
எனவே தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் Aciloc மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> Asthakind LS மருந்தினை பயன்படுத்துவத்தற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
Aciloc 150 mg Tablet Uses in Tamil:
இந்த மருந்து இரைப்பையில் அமில உற்பத்தியின் அளவை குறைத்து, இரைப்பை மற்றும் குடல் புண்களை திறம்பட குணப்படுத்தக்கூடியது.
இந்த மருந்தில் பல மி.கி உள்ளதால் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவை தவிர அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்து கொண்டால் இது பல பக்க விளைவுகளை அளிக்கும் வாய்ப்புள்ளது.
இந்த மருந்தினை உணவுடனோ அல்லது உணவு உட்கொண்ட பிறகோ எடுத்து கொள்ளலாம்.
Aciloc 150 mg Tablet Side Effects in Tamil:
- தூக்கமின்மை
- தலைசுற்றல்
- தலைவலி
- வயிற்றுப்போக்கு
- வயிற்று வலி
- நெஞ்சு வலி
- மூட்டுவலி
Aciloc Tablet மருந்தினை நீங்கள் உட்கொள்ளும் போது மேல்கூறிய அறிகுறிகள் ஏதும் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> Febrex Plus மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
முன்னெச்சரிக்கை:
இந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றி கூறி அவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
நீங்கள் தாய்ப்பால் அளிக்கும் தாய்மாராக இருந்தால் இந்த மருந்தினை கண்டிப்பாக எடுத்து கொள்ளக்கூடாது.
மேலும் நீங்கள் கல்லீரல், சிறுநீரக நோய் மற்றும் போஃபைரியா போன்ற உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.
இந்த மருந்தினை உட்கொண்டால் நிமோனியா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> Nicip Plus மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |