Almox 500 mg Tablet Uses in Tamil
நீங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து மாத்திரை சாப்பிட்டாலும் சரி, மருந்து கடையில் நீங்களாகவே வாங்கி சாப்பிட்டாலும் சரி அந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம், அதை சாப்பிட்டால் நம் உடலில் என்ன விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும். முக்கியமாக மருத்துவரை ஆலோசிக்காமல் நீங்களாகவே மெடிக்களில் என்ன செய்கிறது என்று சொல்லி மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தினந்தோறும் இந்த பதிவில் கூறி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அல்மாக்ஸ் 500 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது.
Almox 500 mg Tablet Uses:
- காதில் தொற்று
- மூக்கில் இரத்தம் வருதல்
- தொண்டை பிரச்சனை
- சுவாச பிரச்சனை
- தோல் தோற்று
- சிறுநீரக பாதை நோய் தொற்று
- டைபாயிட் காய்ச்சல்
- வாயில் சீழ்ப்படிந்த கட்டி
- எண்டோகார்டிடிஸ்
போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ எல்டோபர் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Almox 500 Tablet Side Effects:
- வயிற்று போக்கு
- காய்ச்சல்
- மூட்டு வலி
- தோலின் நிறம் மஞ்சளாக காணப்படும்.
- வயிற்று பிரட்டல் அல்லது வாந்தி
- வலிப்பு
- உடலில் வலி ஏற்படும்.
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. சிலருக்கும் அரிதாக ஏற்படுகிறது. இருப்பினும் இந்த பிரச்சனை தொடர்ந்து இருந்தால் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
நீங்கள் எந்த மாத்திரை சாப்பிட்டாலும் அதன் முழு விவரங்களை பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பவர்கள் மருத்துவரிடம் கேட்டு சாப்பிட வேண்டும்.
ஆஸ்துமா, கல்லீரல், சிறுநீரக பிரச்சனை, ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ வைசோலோன் 5 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்…!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |