அம்லோடிபின் மாத்திரை பயன்கள் | Amlodipine Tablet Uses in Tamil

amlodipine tablet uses in tamil

அம்லோடிபின் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் அதன் பக்க விளைவுகள்

Amlodipine Tablet Uses in Tamil:- வணக்கம் நண்பர்களே.. நமது உடலில் ஏற்படும் பிரச்சனைக்கு நாம் பெருபாலும் மருந்து மாத்திரைகளை அதிகளவு பயன்படுத்துகின்றோம். இருப்பினும் அந்த மருந்து மாத்திரையின் பயன்கள் மற்றும் அதனால் சில சமயம் நமது உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகவும். அந்த வகையில் இந்த பதிவில் அம்லோடிபின் மாத்திரை எந்த பிரச்சனைக்கு பயன்படுகிறது. அதன் பயன்பாடுகள் மற்றும் அதனால் சில சமயம் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி இங்கு படித்தறியலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

அம்லோடிபின் மாத்திரை என்றால் என்ன?

அம்லோடிபின் ரத்தக் கொதிப்பு மருத்துவத்தில் மிகச் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இது, உயர் ரத்த அழுத்தத்தை நன்கு குறைப்பதுடன், இதன் பக்க விளைவும், மிக மிக குறைவு. இதய செயலிழப்பிற்கு பொதுவாக பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், அம்லோடிபின் மாத்திரை, இதயம், இதய ரத்த நாளங்களுக்கும் நல்ல பலன் கொடுக்கிறது. இருப்பினும் இந்த மாத்திரையை எடுக்கும் சிலருக்கு, கால் வீக்கம், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த மருந்தை தொடர்ந்து எடுப்பது மிகவும் நல்லதே.

ஜின்கோவிட் மாத்திரை பயன்கள் | Zincovit Tablet Uses in Tamil

அம்லோடிபின் மாத்திரை பயன்கள்:

  • உயர் இரத்த அழுத்தம் அல்லது குருதி ஊட்டக்குறை இதய நோயை நிர்வகிப்பதற்கான ஒற்றை சிகிச்சை அல்லது கூட்டு சிகிச்சையாக இதைப் பயன்படுத்தலாம்.
  • கரோனரி தமனி நோய் குணமாக இந்த சிகிச்சையாக இதைப் பயன்படுத்தலாம்.
  • அம்லோடிபின் மாத்திரை பெரியவர்கள் மற்றும் 6–17 வயதுடைய குழந்தைகளுக்கு இதய நோய் குணமாக வழங்கலாம்.

அம்லோடிபின் மாத்திரை பக்க விளைவுகள் – Amlodipine Tablet Side Effects in Tamil :

  • கீழ் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் அனைத்தும் சத்தியமான ஒன்று தான், இருப்பினும் எப்போதும் ஏற்படுவதில்லை.
  • பொதுவான பக்க விளைவுகளில் வீக்கம், சோர்வு, வயிற்று வலி மற்றும் குமட்டல் ஆகியவை ஏற்படும்.
  • கால்களில் வீக்கம் ஏற்படும், விரைவான இதயத்துடிப்பு, தலைசுற்றல், படபடப்பு மற்றும் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • கடுமையான பக்க விளைவுகளில் குறைந்த இரத்த அழுத்தம் அல்லது மாரடைப்பு இருக்கலாம்.
  • கர்பிணிப்பெண்கள், தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாமா என்பது தெளிவாக தெரியவில்லை.
  • கல்லீரல் பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தும் போது குறைவான அளவே பயன்படுத்த வேண்டும்.
டோலோ 650 பயன்பாடுகள் | Dolo 650 Uses in Tamil

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil