Azithral மாத்திரை பக்க விளைவுகள் | Azithral Pakka Vilaivugal
நமது உடலில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு விதமான நோய்களுக்கு ஒவ்வொரு மாத்திரைகளை பயன்படுத்துகிறோம். நாம் எந்த மாத்திரையை எடுத்துக்கொண்டாலும் நம் உடலுக்கு இது என்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நாம் இந்த பதிவில் அசித்திரால் 500 டேப்லெட் என்ன மாதிரியான நோய்களை குணப்படுத்துகிறது, அதே சமயம் என்னென்ன பக்க விளைவுகள் இருக்கிறது என்பதையும் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
ஒரு சிலருக்கு உடலில் தொற்றுக்கள் பிரச்சனை ஏற்பட்டு தோல்களை பாதிப்படைய செய்யும். தொற்றுகளில் பாக்டீரியா தொற்று, தொண்டை சம்மந்தமான தொற்று, மார்பு தொற்று, தோல் சம்மந்தமான தொற்றுகள் பிரச்சனை ஏற்படுவதை இந்த அசித்திரால் மாத்திரை தடுத்து நிறுத்துகிறது.
இந்த அசித்திரால் மாத்திரை டைஃபாய்டு காய்ச்சலை முற்றிலும் குணப்படுத்துகிறது.
வெண்படலம் ஏற்பட்டால் அதை குறைத்து விடுகிறது.
காதில் ஏற்படும் தொற்று நோய், மூச்சுக் குழாய் அழற்சி, உள்நாக்கு அழற்சி, மேல் சுவாசக்குழாய் தொற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த மாத்திரை நல்ல சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பக்க விளைவுகள்:
எந்த ஒரு மாத்திரையில் அதிகமான அளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவிற்கு அதன் பக்க விளைவுகளும் நிறைந்திருக்கிறது.
ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி உள்ளவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது.
இந்த அசித்திரால் மாத்திரையை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது வயிற்று வலி, வயிற்றுப்போக்கு பிரச்சனை, வாந்தி, குமட்டல், நரம்பு தளர்ச்சி பிரச்சனை, சருமத்தில் ராக்ஷஸ் பிரச்சனை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலே கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் அல்லது உங்களுக்கு இந்த மாத்திரை எடுத்துக்கொள்ளும் போது வேறு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது நல்லது.
மாத்திரையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்:
மருத்துவர் கூறிய டோஸேஜ் அளவிற்கு சரியான நேரத்தில் சரியான அளவில் மருந்தினை உட்கொள்ள வேண்டும். மாத்திரையினை உடைத்தோ அல்லது நொறுக்கியோ சாப்பிட கூடாது. மாத்திரையை முழுமையாக விழுங்குவது நல்லது.
Azithral 500 Tablet -ஐ உணவுடன் அல்லது உணவில்லாமல் உட்கொள்ளலாம், ஆனால் இதனை குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சிறந்தது.