செதிரிசின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Cetirizine Tablet Uses in Tamil
Cetzine Tablet Uses in Tamil: இன்றைய சூழலில் நம் உடலை தொற்றிலிருந்து பாதுகாப்பது என்பது அறிதான ஒன்று. அதுவும் இந்த கொரோனா காலத்தில் நாம் அதிகமாக சந்திக்கும் தொற்று சளி, இருமல் மற்றும் அலர்ஜி போன்றவைகளே. அந்த நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக ஆங்கில மருந்து அல்லது நாட்டு மருந்து எடுத்துக்கொள்கிறோம். எந்த ஒரு ஆங்கில மருந்து அல்லது நாட்டு மருந்தை உபயோகப்படுத்துவதற்கு முன்பு அந்த மருந்து பற்றிய பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் ஆங்கில மருந்தான செடிரிசைன் மாத்திரை நன்மை மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
cetirizine tablet uses in tamil – தமிழ் இல் cetirizine மாத்திரை பயன்கள் – Cetirizine Tablet
இந்த மாத்திரையின் வேதியியல் பெயர் Cetirizine மற்றும் இதனுடைய Brand Name okacet
- Runny Nose
- அலர்ஜி
- சளி
- அரிப்பு
- மூக்கில் மற்றும் கண்ணில் நீர்வடிதல்.
- தோல் சிவந்து போவது மற்றும் வீங்குவது போன்ற நோய்களை குணப்படுத்துவதற்காக பயன்படுத்தபடுகிறது.
- மேற்கண்ட நோய்கள் உருவாவதற்கான காரணம் Histamine எனும் வேதிப்பொருள் உடலில் சுரப்பதாகும். cetirizine மாத்திரை இந்த வேதிப்பொருள் உருவாவதை தடுத்து உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது.
ஏவியன் 400 மாத்திரை பயன்கள் |
செடிரிசைன் மாத்திரை பக்கவிளைவுகள்:
- Cetirizine மாத்திரையை பகலில் எடுத்துக்கொள்வது சிறந்ததல்ல ஏனென்றால் ஒரு சிலருக்கு தூக்கம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆதலால் இந்த Tablet-ஐ இரவில் எடுத்துக்கொள்வது நல்லது.
- தலைவலி, மயக்கம், சோர்வு, இருமல், மலச்சிக்கல் இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- வேறு ஏதேனும் உடல்நல குறைபாட்டிற்காக (Diabetes, Heart Patients, etc..) மருந்து எடுத்துக்கொள்பவர்கள் இந்த Cetirizine மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
ஒமேய் மாத்திரை பயன்பாடுகள் |
லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் |
செடிரிசைன் மாத்திரை எப்போது சாப்பிடலாம், யார் சாப்பிடலாம் மற்றும் யார் சாப்பிடக்கூடாது:
- cetirizine tablet uses/ cetzine tablet uses tamil: இந்த மாத்திரையை சாப்பிடுவதற்கு முன்னர் மற்றும் சாப்பிடுவதற்கு பின் என எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இரவு சாப்பிடுவது நல்லது.
- கர்ப்பிணி பெண்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
- குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள், ஏற்கனவே உடல் நல குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. மேலும் இந்த மாத்திரையை எத்தனை சாப்பிட வேண்டும் எவ்வளவு டோஸேஜ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மருத்துவரை அணுகிவிட்டு சாப்பிடவேண்டும்.
- வாகன ஓட்டுனர்கள் மற்றும் மது பிரியர்கள் (Alcoholic Persons) இந்த மாத்திரையை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
- தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் நோயிலிருந்து விடுபடலாம் அதுமட்டும் இல்லாமல் நீங்கள் Active ஆகவும் இருக்கலாம். இந்த மாத்திரையின் விலை Rs.20/-.
டோலோ 650 பயன்பாடுகள் | Dolo 650 Uses in Tamil |
ஜின்கோவிட் மாத்திரை பயன்கள் | Zincovit Tablet Uses in Tamil |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |