டெக்ஸோனா மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Dexona Tablet Uses in Tamil
Dexona Tablet Uses in Tamil: ஒரு மாத்திரையை நாம் பயன்படுத்துவதற்கு முன்னர் அந்த மாத்திரை பற்றிய பொதுவான நன்மைகளை தெரிந்து கொள்வது முக்கியம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் டெக்சோனா மாத்திரை பற்றிய நன்மைகள், தீமைகள் பற்றி பார்க்கலாம். இது ஒரு Steroid வகை மாத்திரை ஆகும். இந்த மாத்திரை பயன்படுத்துவதால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கின்றன. அதே வேலையில் சில தீமைகளும் காணப்படுகிறது, டெக்சோனா மாத்திரை பற்றிய தகவலை பார்க்கலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
டெக்சோனா மாத்திரை பயன்கள் – Dexona tablet uses in tamil – Dexona Tablet Uses Tamil
- இந்த மாத்திரையை உபயோகிப்பதால் உடலில் ஏற்படும் சரும நோய்களை சரி செய்ய பயன்படுகிறது.
- அழற்சி மற்றும் சுவாச பிரச்சனைகளான ஆஸ்துமா போன்ற நோய்களை சரி செய்ய உதவுகிறது.
- தோலில் ஒவ்வாமையால் உண்டாகும் தோல் வெடிப்பு, தோல் சிவந்து போதல், சொரியாஸிஸ் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
- செரிமான கோளாறுகள், இரைப்பை கோளாறுகள், பெருங்குடல் நோய்கள், குடல் வீக்கம், சிறுநீரக கோளாறு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
- கண் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யவும், கண் நோய்களான கண் எரிச்சல், கண் இமை வீக்கத்தை குணப்படுத்த உதவுகிறது.
- வாத நோய்களான கீல் வாதம், முடக்கு வாதம் மற்றும் மூட்டு வலி, புற்றுநோய் போன்ற நோய்களை சரி செய்ய உதவுகிறது. இது போன்ற பல நோய்களை சரி செய்ய உதவுகிறது.
புளுக்கோனசோல் மாத்திரை நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் |
டெக்சோனா மாத்திரை பக்க விளைவுகள் – Dexona Tablet Side Effects in Tamil:
- வயிறு விரிவடைதல், தசை செயல் இழந்து பலவீனமானதாக இருப்பது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
- ஒவ்வாமை, உடல் வீக்கம், எப்போதும் இருந்த உடல் எடையை விட சற்று உடல் பருமன் அதிகரிப்பது, மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- கண்களில் அழுத்தம், பார்வை திறன் குறைவு, ரத்த அழுத்தம் உயர்வது, ஹைப்பர்கிளைசீமியா, இதய துடிப்பில் மாற்றம், வலிப்பு போன்ற நோய்கள் வரலாம்.
- மேலே கூறப்பட்ட பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள் |
பயன்படுத்த கூடாதவர்கள்:
- முன் சிறுகுடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகம் மற்றும் கல்லிரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்த வேண்டாம்.
- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் அல்லது மாரடைப்பு உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.
- கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் டெக்சோனா மாத்திரை பயன்படுத்த வேண்டாம். அப்படி உபயோகப்படுத்துவதாக இருந்தாலும் மருத்துவரை கேட்டு பின்னர் சாப்பிடவும்.
மருந்து அளவு:
- 0.5MG, 5MG
- Dexamethasone என்ற பெயரிலும் கிடைக்கிறது.
லெத்ரோஸ் பயன்பாடுகள் & அதன் பக்க விளைவுகள் |
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |