Dydroboon Tablet Uses in Pregnancy in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. தினமும் Tablet பற்றிய பதிவுகளை பதிவு செய்து வருகிறோம். அதாவது நாம் எடுத்துக்கொள்ளும் Tablet-யின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி படித்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது Dydroboon Tablet-யின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க இந்த Dydroboon Tablet-யின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!
Dydroboon Tablet:
இந்த Dydroboon Table Dubatox / Dydrogesterone / Dydroboon/ Duphaston என்ற பெயர்களில் விற்கப்படுகிறது. இந்த Dubatox / Dydrogesterone / Dydroboon/ Duphaston என்று எந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலும் அவற்றின் பயன்கள் ஒன்று தான். நீங்கள் எடுத்துக்கொள்ளும் இந்த மாத்திரைகளில் முக்கியமான விஷயமே டைட்ரோஜெஸ்டெரோன் (Dydrogesterone).
பொதுவாக பெண்களுக்கு உடலில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் தான் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய உதவி புரிகிறது. இருப்பினும் டைட்ரோஜெஸ்டெரோன் (Dydrogesterone) என்பது ஒரு புரோஜெஸ்ட்டிரோன் (progesterone) எனப்படும் உடல் ரீதியாக உற்பத்தி செய்யப்படும் இயற்கை ஹார்மோனுக்கு ஒரு செயற்கை மாற்றாகும்.
இந்த டைட்ரோஜெஸ்டெரோன் (Dydrogesterone) புரோஜெஸ்ட்டிரோன் (progesterone) சாதாரண இயற்கை புரோஜெஸ்ட்டிரோன் போன்று தான் நமது உடலில் செயல்படுகிறது. ஆக இது ஒரு ஸ்டீராய்டு புரோஜெஸ்டின் என்று சொல்லலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜஸ்டின் 25மி.கி மாத்திரை பற்றிய தகவல்..!
இந்த மாத்திரை எப்படி வேலை செய்கிறது?
இந்த மாத்திரையை நாம் எடுத்துக்கொள்ளும் போது, நமது உடலில் புரோஜெஸ்ட்டிரோனை ஆக்டிவேட் செய்கிறது. இந்த புரோஜெஸ்ட்டிரோன் ஆக்டிவேட் ஆகும் போது மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் சரியாக்கப்படுகிறது.
பயன்கள்:
இந்த டைட்ரோஜெஸ்டெரோன் (Dydrogesterone) யாருக்கெல்லாம் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன என்பதை பற்றி பார்க்கலாம்.
மாதவிடாய் கோளாறுகள், கருச்சிதைவு பிரச்சனைக்கு, எண்டோமெட்ரியோசிஸ், கருவுறாமை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் ஒழுங்கற்ற அல்லது வலிமிகுந்த மாதவிடாய் பிரச்சனைக்கும் இந்த மாத்திரை சிகிச்சையளிக்கிறது.
மாத்திரை சாப்பிடும் முறை:
இந்த மாத்திரை பொதுவாக வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மாத்திரை ஆகும்.
பக்கவிளைவுகள்:
இந்த டைட்ரோஜெஸ்டிரோன் (Dydrogesterone) மாத்திரை தலைவலி, வாய் வறட்சியாக இருக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்கள், மாதவிடாய் காலங்களில் அதிக இரத்தப்போக்கு, எடை அதிகரிப்பு, கல்லீரல் சிக்கல்கள், மஞ்சள் காமாலை, வயிற்று அசௌகரியம் மார்பகங்களில் மார்பக வலி அல்லது மென்மை போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆக இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற அறிகுறிகள் தங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நார்ஃப்ளாக்ஸ் 400 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
யாரெல்லாம் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளக்கூடாது?
இந்த மாத்திரை தாய்ப்பால் கொடுக்கு தாய்மார்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு மற்றும் 18 வயதிற்கு கீழ் இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |