Febrex Plus Tablet Uses in Tamil
நமது முன்னோர்களின் காலத்தில் எல்லாம் உணவு தான் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் மருந்தே உணவாகிவிட்டது. இதற்கு இன்றைய சூழலில் உள்ள மாசுபாட்டின் காரணமாக அதிகரித்துள்ள நோய்கள் தான். ஆம் நண்பர்களே அதிகரித்துள்ள நோய்களுக்கு தீர்வாக உள்ள மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இப்பொழுது நமக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றால் அதனை சரி செய்வதற்காக நாம் மருத்துவரை அணுகி அவர் தரும் மருந்தினை வாங்கி பயன்படுத்துகின்றோம் என்றாலும், நாம் உட்கொள்ளும் மருந்தினை பற்றிய சரியான புரிதல் நமக்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அதனால் தான் இன்றைய பதிவில் Febrex Plus மாத்திரையை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> Nicip Plus மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்
Febrex Plus Tablet Uses in Tamil:
இந்த Febrex Plus மாத்திரை ஒரு ஆண்டிஹிஸ்டமைன் ஆகும். இது உடலில் ஹிஸ்டமைனின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. இந்த Febrex Plus மாத்திரை சைனஸ், மூக்கு ஒழுகுதல், தொண்டை அரிப்பு, சுவாச நோய்த்தொற்றுகள், காய்ச்சல் மற்றும் தும்மல் போன்றவற்றிற்கு தீர்வாக அமைகின்றது.
இந்த மருந்தை ஒரு மாத்திரை அல்லது திரவ வடிவத்தில் வாய் வழியே உணவுடனோ அல்லது உணவு இல்லாமலோ எடுத்து கொள்ளலாம். இதில் இரண்டு மி.கி அளவு உள்ளதால் உங்களுக்கு அளித்த சரியான அளவில் மட்டும் இந்த மருந்தினை எடுத்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> Bandy Plus மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
அதிலும் குறிப்பாக மருத்துவர் அளித்த அளவை தவிர அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்து கொண்டால் இது பல பக்க விளைவுகளை அளிக்கும் வாய்ப்புள்ளது.
Febrex Plus Tablet Side Effects in Tamil:
- தலைச்சுற்றல்
- பதட்டம்
- மலச்சிக்கல்
- குமட்டல்
- அமைதியின்மை
- மங்கலான பார்வை
- உலர்ந்த வாய்
- ஒருங்கிணைப்பு குறைதல்
- எரிச்சல் உணர்வு
- சுவாச பிரச்சனை
- கவன கோளாறு
- சிறுநீர் கழிப்பதில் சிக்கல்
Febrex Plus மாத்திரையை நீங்கள் உட்கொள்ளும் போது மேல்கூறிய அறிகுறிகள் ஏதும் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் => Nefita மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
முன்னெச்சரிக்கை:
இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்பு உங்களுக்கு சுவாச பிரச்சினைகள், கண்ணிறுக்கம், இதய பிரச்சினைகள், கல்லீரல் நோய், உயர் இரத்த அழுத்தம், வலிப்புத்தாக்கங்கள், அதிகப்படியான தைராய்டு மற்றும் வயிற்று பிரச்சினைகள் இருந்தால் அதனை பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
மேலும் இந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றி கூறி அவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
தொடர்ந்து 7 நாட்களுக்கு மேல் இந்த Febrex Plus மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டாம்.
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் => Metformin 500 mg மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |