லோபரேத் மாத்திரை பயன்கள் | Loparet Tablet Uses in Tamil

Advertisement

லோபரேட் மாத்திரை பக்க விளைவுகள் | Loparet Tablet Side Effects in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் லோபரேட் மாத்திரை சாப்பிடுவதால் என்ன பயன்கள் மற்றும் உடலில் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம். உடலில் ஏதேனும் சிறிய தலை வலி என்றால் கூட நாம் முதலில் எடுத்துக்கொள்வது மாத்திரையை தான். மாத்திரைகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அதிக அளவில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது உடலில் சில பின் விளைவுகள் ஏற்படுகிறது. சரி வாங்க நாம் இன்றைய மருந்து பகுதியில் லோபரேத் மாத்திரையின் பயன்களை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

லிம்சீ மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

லோபரேத் மாத்திரை பயன்கள்:

லோபரேத் மாத்திரை எதற்கெல்லாம் பயன்படுகிறது என்றால்:

 • லூஸ் மோஷன்
 • வயிற்றுப்போக்கு பிரச்சனை
 • தொற்றினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு
 • குடல் கட்டுப்பாடு இழப்பிற்கு

போன்ற பிரச்சனைகளுக்கு இந்த மாத்திரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

லோபரேட் மாத்திரை பக்க விளைவுகள்:

எந்த ஒரு உணவிலும் அதிக அளவில் நன்மை இருந்தால் கண்டிப்பாக பக்க விளைவுகள் இருக்கும். அது போன்று தான் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் கண்டிப்பாக பக்க விளைவுகளும் அடங்கியிருக்கும். இந்த மாத்திரையை அதிகமாக எடுத்துக்கொண்டால் எந்த மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் என்றால்

 • மலச்சிக்கல் பிரச்சனை
 • தூக்கக் கலக்கமாக இருத்தல்
 • அடி வயிற்றில் விரிவு ஏற்படுதல்
 • தலைவலி
 • உணர்வு இல்லாதது போன்று இருத்தல்
 •  வயிற்று வலி
 • அஜீரண கோளாறு
 •  குமட்டல்
 • ஸ்லோ தசை
 • வாந்தி
 • தோல் தடித்து போதல்
 •  தோல் கடுமையான ஒவ்வாமைபிரச்சனை ஏற்படுதல்
 •  அடிக்கடி தலைச்சுற்றல்
 •  வாய் உலர்ந்து போதல்
 • சிறுநீர் கழிக்கும் போது சிரமம் ஏற்படுதல்

இந்த மாத்திரையை எடுத்துக்கொண்ட பிறகு மேல் கூறிய பக்க விளைவுகளில் தங்களுக்கு ஏதேனும் தென்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

பான் 40 மிகி மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்கவிளைவுகள்

மாத்திரை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்:

 • கர்ப்பிணிகளுக்கு இந்த மாத்திரையின் பக்க விளைவுகள் குறைவுதான். இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை படி எடுத்துக்கொள்வது நல்லது.
 • குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த லோபரேத் மாத்திரையை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
 • மன நல கோளாறுகள் இருப்பவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
 • இதய பிரச்சனை இருப்பவர்களுக்கு சற்று இந்த மாத்திரை பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இதுபோன்ற மருந்துகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement