வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Metformin 500 mg மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Updated On: September 9, 2023 8:48 AM
Follow Us:
Metformin 500 mg Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Metformin 500 mg Tablet Uses in Tamil

நமது முன்னோர்களின் காலத்தில் எல்லாம் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மருந்தே உணவு என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவுப்பழக்க வழக்கமும் தான். மேலும் இவற்றால் அதிகரித்துள்ள நோய்களும் தான் காரணம். அப்படி அதிகரித்துள்ள நோய்களினால் அவற்றுக்கு தீர்வாக அமையும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இப்பொழுது உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்கொள்வீர்கள். அப்படி நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்திருப்பது நல்லது. அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் Metformin 500 mg மாத்திரையை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

இதையும் படித்துப்பாருங்கள்=> Gutrex D 5 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Metformin 500 mg Tablet Uses in Tamil:

பொதுவாக இந்த மெட்ஃபோர்மின் 500 மி.கி மாத்திரை (Metformin 500 MG Tablet ) உடலில் சீரான இரத்த சர்க்கரை அளவுகளை பராமரிக்க உதவும் ஒரு மருந்து ஆகும். மேலும் இந்த மருந்து நீரிழிவு நோய், கருப்பை நீர்கட்டிகள் மற்றும் இதய கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

இந்த மருந்து உடலில் கல்லீரல் வெளியிடும் குளுக்கோஸின் அளவை குறைத்து வேலை செய்கின்றது. மேலும் இந்த மெட்ஃபோர்மின் 500 மி.கி மாத்திரை வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது.

இந்த மருந்து வாய் வழியாக எடுத்து கொள்ளக்கூடிய கரைசல் அல்லது மாத்திரை வடிவத்திலும் கூட கிடைக்கிறது.

Metformin 500 mg Tablet Side Effects in Tamil:

Metformin 500 mg Tablet Side Effects in Tamil

  1. வயிற்றுப்போக்கு
  2. தலைசுற்றல்
  3. தலைவலி
  4. வாந்தி
  5. வயிற்று பிடிப்பு

மெட்ஃபோர்மின் 500 மி.கி மாத்திரையை நீங்கள் உட்கொள்ளும் போது மேல்கூறிய அறிகுறிகள் ஏதும் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> Dexorange மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

முன்னெச்சரிக்கை:

இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.

அதிலும் குறிப்பாக நீங்கள் கற்பமாகவோ அல்லது தாய்ப்பால் அளிக்கும் தாய்மாராக இருந்தாலும் இந்த மெட்ஃபோர்மின் 500 மி.கி மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.

பத்து வயதுக்கு குறைவான குழந்தைகள் இந்த மருந்தினை எடுத்துக் கொள்ளக்கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஜூனியர் லான்சோல் 15 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now