மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள் | Multivitamin Tablet Uses in Tamil

Advertisement

மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Multivitamin Tablet Benefits in Tamil 

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. பொதுவாக உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் உணவில் இருக்கிறது. இருப்பினும் சில மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளை தடுப்பதற்காக சில சத்து மாத்திரைகள் சாப்பிடுவது வழக்கம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் இந்த பதிவில் ஊட்டச்சத்து அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள் | Multivitamin Tablet Uses in Tamil:

Multivitamin Tablet Benefits in Tamil

  • ஊட்டச்சத்து குறைபாடு, புரதம் உடலில் குறைவாக இருப்பதால் ஏற்படும் புரோட்டீன் குறைபாடு போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
  • தோல் நோய்கள், உடலுக்கு தேவையான சப்ளிமெண்ட்ஸ், மைக்ரேன் தலைவலி, சாம்பல் போன்ற முடி ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது.
  • இதய நோய்களை குணப்படுத்தவும், அல்சைமர், கீல்வாதம், செல் சேதம் போன்றவற்றை சரி செய்யவும் பயன்படுகிறது.
  • ஸ்கர்வி, கண் பார்வை மங்குதல், தயாமின் குறைபாடு, உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கவும், மூளை பிரச்சனை, நரம்பு பிரச்சனை, வயிற்றுப்போக்கு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
  • வைட்டமின் A, B3 குறைபாடுகளை சரி செய்யவும் உதவுகிறது.
புளுக்கோனசோல் மாத்திரை பயன்கள்

Multivitamin Tablet Side Effects in Tamil – மல்டி வைட்டமின் மாத்திரை பக்க விளைவுகள்:

  • இந்த மாத்திரையை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் சோர்வு, பசியின்மை, வாந்தி, குமட்டல், தோலில் நிறங்களில் மாற்றம் ஏற்படும்.
  • தோல் சிவந்து போதல், ஒவ்வாமை, முகம் மற்றும் உதடுகள் வீக்கம் அடைவது, சாப்பிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.
  • நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், ரத்த அழுத்தம் குறைவது, இருமல், தலைவலி, தொண்டை வலி, வயிற்று கோளாறு, மலச்சிக்கல், அதிகமாக தாகம் எடுப்பது, போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
  • சிறுநீரக பிரச்சனை, தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல், தோல் எரிச்சல், அதிக வியர்வை வெளியேறுவது, முதுகு வலி, கண்கள் உலர்ந்து போதல், ஹெபடைடிஸ், இரைப்பை பிரச்சனை, டிஸ்பினியா, மஸ்குலோஸ்கெலெடல் அறிகுறிகள் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மல்டி வைட்டமின் மாத்திரை யார் சாப்பிடலாம்:

  • உடலில் வைட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்கு, கர்ப்பிணி பெண்கள் மற்றும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த மாத்திரை பயன்பட்டு வருகிறது.
  • குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், வேறு ஏதேனும் உடல் நல குறைவிற்காக மருந்து எடுத்து கொள்பவர்கள் மருத்துவர் ஆலோசனையை கேட்டு பின்னர் சாப்பிடவும்.

யார் எடுத்துக்கொள்ள கூடாது?

  • மது அருந்துபவர்கள் இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.
  • கல்லீரல் பிரச்சனைகள், சிறுநீரக நோய், வயிறு குடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த மாத்திரையை சாப்பிட வேண்டாம்.
  • இந்த மாத்திரையை மருத்துவர் எப்போது சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறாரோ அப்பபொழுது மட்டுமே சாப்பிட வேண்டும், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தானாகவே எந்த மாத்திரையையும் சாப்பிட கூடாது.

மாத்திரை அளவு:

  • Vitamin D3 – 50 IU
  • Vitamin B2 – 1 MG
  • Niacinamide – 7.5 MG
  • Vitamin B1 – 1 MG
  • Calcium Pantothenate – 1 MG
  • Vitamin A – 800 IU
  • Vitamin C – 12.5 MG போன்ற அளவுகளில் கிடைக்கிறது.
ராணிடிடைன் மாத்திரை பயன்கள்
லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement