Okacet Tablet Uses
மனிதனாக பிறந்த அனைவருமே உடல் நிலை குறைபாடு ஏற்பட்டால் முதலில் எடுத்து கொள்வது மாத்திரை தான். அந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து கடையில் தானாகவே மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. நீங்கள் மருத்துவ ஆலோசனையின் படி மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும் சரி, தானாக வாங்கி சாப்பிட்டாலும் சரி எந்தெந்த மாத்திரை எதற்காக பயன்படுகிறது. அதனின் பக்க விளைவுகளையும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒகாசெட் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!
ஒகாசெட் மாத்திரை பயன்கள்:
ஒகாசெட் மாத்திரை தும்மல் போன்ற லேசான ஒவ்வாமை அறிகுறிகள், மூக்கில் நீர் வடிதல், கண்களில் நீர் வடிதல், மற்றும் அரிப்பு மூக்கு அல்லது தொண்டை போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை சரி செய்ய மருந்தாக கொடுக்கப்படுகிறது.
- தும்மல்
- மூக்கின் நீர் வடிதல்
- அரிப்பு
- கண்களில் நீர் வடிதல்
இதையும் படியுங்கள் ⇒ அஸ்கார்பிக் அமிலம் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்..!
ஒகாசெட் மாத்திரை பக்க விளைவுகள்:
- வயிற்று வலி
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- வாய் வறட்சி
- உடல் சோர்வு
- பார்வை குறைபாடு
- தூக்கமின்மை
- சிறுநீர் பிரச்சனை
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனை ஏற்பட்டால் மாத்திரையை உட்கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
முன்னெச்சரிக்கைகள்:
ஒகாசெட் மாத்திரை சாப்பிடும் போது மயக்கம் பிரச்சனையை ஏற்படுத்தலாம். இந்த மாத்திரையை சாப்பிடும் போது மது அருந்துவதையும், வாகனம் ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.
சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனை இருந்தால் இந்த மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் எந்தெந்த பிரச்சனைக்கு எந்தெந்த மாத்திரைகள் எடுத்து கொள்கிறீர்கள் என்பதை முழுமையாக மருத்துவரிடம் கூற வேண்டும்.
இதையும் படியுங்கள் ⇒ அல்மாக்ஸ் 500 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |