அஸ்கார்பிக் அமிலம் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்..!

Ascorbic Acid Tablet Uses in Tamil

அஸ்கார்பிக் ஆசிட் மாத்திரை பயன்கள் | Ascorbic Acid Tablet Uses in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்றைய மருந்து பதிவில் அஸ்கார்பிக் ஆசிட் மாத்திரை எதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்க்கலாம். பொதுவாக இந்த மாத்திரை வைட்டமின் சி சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு  பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரையை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன மற்றும் என்ன தீமைகள் கிடைக்கின்றன என்பதை பற்றியெல்லாம் விரிவாக இந்த தொகுப்பில் படித்தறியலாம் வாங்க. மேலும் யாராக இருந்தாலும் சரி எந்த ஒரு உடல் சார்ந்த பிரச்சனைக்காக மெடிக்கல் ஷாப்பில் மருத்துவரின் அனுமதியின்றி தானாக எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் வாங்கி உட்கொள்ள கூடாது. மருத்துவர் அனுமதியின்றி மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது நீங்கள் தான் பல உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக  பயன்படுத்த கூடாது.

அஸ்கார்பிக் அமிலம் எதில் உள்ளது – வைட்டமின் சி:ascorbic acid tablets

பொதுவாக இந்த வைட்டமின் சி சத்து நாம் சாப்பிடும் உணவுகளில் அதிகளவு இருக்கிறது. சிட்ரஸ் பழங்கள், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் கீரை, காய்கறிகள் போன்ற உணவுகளில் இயற்கையாகவே கிடைக்கிறது.  இந்த வைட்டமின் சி எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்கள், தசைகள் மற்றும் நாளங்களுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். மேலும் இரத்த சிவப்பணு உற்பத்திக்குத் தேவையான இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கும் வைட்டமின் சி சத்து உதவுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அல்மாக்ஸ் 500 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

அஸ்கார்பிக் அமிலம் மாத்திரையின் பயன்பாடுகள்:

உணவுகள் மூலம் இந்த சத்தை எடுத்துக்கொள்ள தயாராக இல்லாதவர்கள் அல்லது வைட்டமின் சி சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு அஸ்கார்பிக் ஆசிட் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.

அஸ்கார்பிக் ஆசிட் மாத்திரை சாப்பிடுவதற்கு முன் நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:

உங்களுக்கு எப்போதாவது வைட்டமின் சி சப்ளிமெண்ட்டுக்கு அலர்ஜி ஏற்பட்டிருந்தால், அஸ்கார்பிக் அமிலத்தை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக கற்கள் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்.

நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால் புகைபிடித்தல் அஸ்கார்பிக் அமிலத்தின் செயல்திறனை இது குறைக்கும்.

கர்ப்ப காலத்தில் அல்லது நீங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது  எந்தவொரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி அஸ்கார்பிக் அமிலத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.

நீங்கள் அஸ்கார்பிக் அமிலத்தை எடுத்துக் கொள்ளும் வேளையில் தண்ணீர் அதிகளவு குடிக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எல்டோபர் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

மாத்திரையை சாப்பிடும் முறை:

மாத்திரையை முழுவதுமாக விழுங்காமல், உங்கள் வாயில் கரைய விடவும். மாத்திரை கரைய கரைய கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கவும்.

பக்க விளைவுகள் – Ascorbic Acid Tablet Side Effects:

இந்த மாத்திரை உங்களுக்கு அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். கீழ் கண்ட பக்க விளைவுகளில் உங்களுக்கு ஏதாவது ஒரு பக்க விளைவு தொடர்ச்சியாக இருந்தால். மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி கொண்டு, உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது. சரி வாங்க அந்த பக்க விளைவுகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

1. மூட்டு வலி,
2. பலவீனம் அல்லது
3. சோர்வு உணர்வு
4. எடை இழப்பு
5. வயிற்று வலி
6. குளிர் காய்ச்சல்
7. சிறுநீர் போவதில் சிரமம்
8. உங்கள் பக்கவாட்டில் அல்லது
9. கீழ் முதுகில் கடுமையான வலி
10. உங்கள் சிறுநீரில் இரத்தம்

பொதுவான பக்க விளைவுகள்:

1. நெஞ்செரிச்சல்
2. வயிற்று வலி
3. குமட்டல்
4. வயிற்றுப்போக்கு
5. வயிற்றுப் பிடிப்புகள் ஆகியன ஆகும்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
டெரிபிலின் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

முக்கிய குறிப்பு:

இந்த மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்கி பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து