Montex Tablet Uses in Tamil
நாம் எடுத்துக்கொள்ளும் நாட்டு மருந்தாக இருந்தாலும் சரி ஆங்கில மருந்தாக இருந்தாலும் சரி எந்த மருந்தாக இருந்தாலும் அதை பயன்படுத்துவதற்கு முன்னர் அந்த மாத்திரை அல்லது மருந்தை பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் நாம் எடுத்து கொள்ளும் எந்த மாத்திரை மருந்தாக இருந்தாலும் சரி அதில் நன்மைகள் மட்டுமில்லை, தீமையும் அடங்கியிருக்கிறது. நம்முடைய பதிவில் தினந்தோறும் மாத்திரை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதவில் Montex மாத்திரையில் உள்ள நன்மை மற்றும் தீமையை அறிந்து கொள்வோம் வாங்க..
Montex Tablet Uses:
ஒவ்வொரு மாத்திரையும் ஒவ்வொரு பயனையும் கொண்டுள்ளது. அந்த வகையில் Montex மாத்திரையில் உள்ள நன்மை மற்றும் தீமையை அறிந்து கொள்வோம்.
இந்த மாத்திரையானது அலர்ஜி, சுவாச பிரச்சனை, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Montex Tablet Side Effects:
- தலைவலி
- குமட்டல் மற்றும் வாந்தி
- நெஞ்சு இறுக்கமாக காணப்படுதல்
- மூட்டுவலி
- உடல் அரிப்பு
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனையானது தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அது போல் இந்த பக்க விளைவானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அது போல வேறு ஏதும் பக்க விளைவுகளையும் சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
Ebastine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
முன்னெச்சரிக்கை:
கர்ப்பிணி பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
நீங்கள் மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து கொள்ள கூடாது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |