Wysolone 10 mg Tablet Uses in Tamil
இன்றைய காலகட்டத்தில் மருந்துகளால் மட்டுமே நம்மில் பலரின் வாழ்க்கை சீராக இயங்கி கொண்டிருக்கிறது எனலாம். அதற்கு காரணம் இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மற்றும் நாம் அனைவரின் உணவு பழக்கமும் தான். அப்படி நாம் பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லையென்றே இருக்கும். அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்து பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வைசோலோன் 10 mg மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது.
இதையும் படித்துப்பாருங்கள்=> Nodosis மாத்திரை பற்றிய தகவல்
Wysolone 10 mg Tablet Uses in Tamil:
இந்த வைசோலோன் 10 mg மாத்திரை அழற்சியை தடுக்க உதவிபுரிகிறது. பொதுவாக தோல் பிரச்சனைகள், மூட்டுவலி, சுவாச கோளாறுகள், சொரியாசிஸ் மற்றும் சரும வீக்கம் போன்ற நோய்களுக்கு இந்த மாத்திரை தீர்வாக அமைகிறது.
இந்த மருந்து வாய்வழி எடுத்துக்கொள்ளும் மருந்து மற்றும் மாத்திரைகளின் வடிவில் கிடைக்கிறது.
மருத்துவர் இந்த மருந்தினை உங்களுக்கு பரிந்துரைக்கிறார் என்றால் அதனை எடுத்துக் கொள்ளுவதற்கு முன் உங்களுக்கு கல்லீரல், நீரிழிவு, தைராய்டு பிரச்னைகள், சிறுநீரக நோய், இதயப் பிரச்சனைகள் மற்றும் தசை கோளாறுகள் போன்ற நோய்கள் இருந்தால் மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> வைசோலோன் 5 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இந்த வைசோலோன் 10 mg மாத்திரை ஒரு ஸ்டிராய்டு மாத்திரை என்பதால் எடுத்துக் கொள்வதற்கு முன் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
பொதுவாக இந்த மாத்திரை ஒரு ஸ்டிராய்டு மாத்திரை என்பதால் இதனை மருத்துவர் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு பரிந்துரைப்பது இல்லை.
Wysolone 10 mg Tablet Side Effects in Tamil:
- தூக்க தொந்தரவுகள்
- எரிச்சலூட்டும் தன்மை
- கண்புரை
- Foodpipe உள்ள புண்கள்
- வெர்டிகோ
- அஜீரணம்
- குமட்டல்
- கண் அழுத்த நோய்
- மறதி
- வயிறு புண்கள்
- வயிற்று வலி
- உயர் இரத்த அழுத்தம்
- எடை அதிகரிப்பு
- வயிற்றுப்போக்கு
- கடுமையான கணைய அழற்சி
- ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஜஸ்டின் 25மி.கி மாத்திரை பற்றிய தகவல்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |