பெண்களின் மார்பு தசைகள் உறுதியாக இருப்பதற்கு, இந்த ஆசனத்தை செய்தால் மட்டும் போதும்.

breast yoga exercises in tamil

பெண்கள் தினமும் செய்ய வேண்டியவை

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் பெண்களுக்கான ஒரு முக்கியமான பதிவு. பொதுவாக பெண் என்றாலே அழகு, அந்த அழகை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதில் அழகு என்பது முகமட்டுமல்ல, உடம்பும்தான். அந்த வகையில் அவர்களின் மார்புத் தசைகளை உறுதியாக்குவதற்கான ஒரு அருமையான ஆசனத்தை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.  மேலும்  அவை என்ன ஆசனம், இதனால் என்ன பயன் என்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.

யோகா வகைகள் மற்றும் பயன்கள்..! 

தனுராசனம் செய்முறை:

பெண்கள் பொதுவாக மார்பு தசைகளை உறுதிப்படுத்துவதற்காக, பல வகையான இன்ஸ்டன்ட் கிரீம்களை வாங்கி உபயோகிப்பார்கள். இந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கும் பொழுது, ஆரம்பத்தில் நல்ல பலன்களை தந்து வந்தாலும, சில நாட்கள் கழித்து மார்பக புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை உருவாகின்றது. எனவே இது போன்ற கிரீம்களை உபயோகிப்பதற்கு பதில், தினமும் தனுராசனத்தை  செய்தால் போதும், உங்களுடைய மார்பக தசை உறுதியாகிவிடும். மேலும் அவற்றை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம்.

dhanurasana yoga step by step in tamil

  1. தனுராசனத்தை செய்வதற்கு, முதலில் நீங்கள் ஒரு பெட்ஷீட்டை விரித்துக் கொள்ளவும், பிறகு அதன் மேல் நீங்கள் நீட்டமான வாக்கில், குப்பற படுக்க வேண்டும். 
  2. குப்பறப்படுத்த பிறகு  உங்களுடைய இரண்டு கைகளையும், மேல் இருக்கும் படத்தில் 1 ஸ்டெப்பில் இருப்பது போல,  பக்கவாட்டில் ஒட்டிய படி கைகளை வைக்க வேண்டும். 
  3. அடுத்ததாக மேலே கொடுப்பட்டிருக்கும் 2 ஸ்டெப்பில் இருப்பது போல உங்களுடைய இரண்டு கால்களையும் மேல தூக்க வேண்டும். 
  4. இரண்டு கால்களை மேலே தூக்கிய பிறகு, உங்களுடைய வலது கையை கொண்டு வலது காலையும், இடது கையை கொண்டு இடது காலையும் இறுக்கமாக  பிடிக்க வேண்டும். 
  5. அடுத்ததாக மேலே கொடுக்கப்பட்டிருக்கும்  நடுவில் இருக்கும் படத்தை போல, உங்களுடைய மார்பு பகுதி, கழுத்து போன்றவற்றை முதுகுடன் சேர்த்து வில் போன்ற வடிவில் இருக்க வேண்டும். அதாவது உங்களுடைய அடி வயிறு மட்டும்தான் தரையில் பட வேண்டும்.
  6.  இந்த தனுராசனத்தை செய்யும் பொழுது உங்களுடைய மூச்சுத்திறன் இயல்பான நிலையில் இருப்பது அவசியம். 

தனுராசனம் பயன்கள்:

இந்த தனுராசனத்தை பொதுவாக யார் செய்து வந்தாலும் நல்ல பலன்களை தரும், குறிப்பாக பெண்களுக்கு இவை ஒரு சிறந்த ஆசனமாக இருக்கின்றது.  இந்த தனுராசனத்தை பெண்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் செய்து வரும் பொழுது, ஹார்மோன்களால் சுரக்கும், மார்பக பிரச்சனைகள் எதுவும் நடக்காது.

இவை மார்பகத்தை மட்டும் உறுதியாக்குவது மட்டுமின்றி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் அடிவற்றியில் இருக்கும் கொழுப்பை கரைத்து, தொப்பை குறையும்.

தினமும் இந்த ஆசனத்தை செய்து வரும் பொழுது,  உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும், இதனால்  சோம்பல் பிரச்சனைகள் நீங்கி, சுறுசுறுப்பாக இருக்கலாம். எனவே நீங்களும் இந்த ஆசனத்தை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் 👇

யோகா யாரெல்லாம் செய்ய கூடாது தெரியுமா.?
சருமத்தை பொலிவாக்கும் யோகாசனம்..!
மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய யோகாசனம்..!

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com