முகம் அழகு பெற யோகா
முகம் அழகாக மாற வேண்டும் என்ற பல விதமான கிரீம், பவுடர் மற்றும் Face பேக் என புதிதாக அறிமுகம் ஆகியுள்ள எதுவாக இருந்தாலும் அதனை உடனே வாங்கி பயன்படுத்தி விடுவார்கள். ஆனால் இதுமாதிரி செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருளை முகத்திற்கு பயன்படுத்துவது அவ்வளவு நன்மை கிடையாது. இது அனைத்தும் தெரிந்தாலும் கூட எப்படியாவது முகம் அழகாக மாறிவிடாத என்ற ஆசை பலருக்கு இருக்கிறது. இனி நீங்கள் எந்த விதமான கிரீமும் பயன்படுத்தாமல் ஒரே ஒரு யோகாவை மட்டும் செய்து முகத்தில் பருக்கள் எதுவும் இல்லாமல் அழகாக மாற்றிவிடலாம். மேலும் அந்த யோகாவை எப்போது எப்படி செய்ய வேண்டும் என்று விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ குறட்டையை குறைக்க மாத்திரை எதுவும் வேண்டாம் இதை மட்டும் செய்தால் போதும்..!
Face Beauty Yoga in Tamil:
மனதில் அழுத்தம் மற்றும் உடலில் ஏற்படும் வெப்பம் ஆகியவற்றின் காரணமாக நமது முகத்தில் பருக்கள் வரும். ஆகையால் இந்த இரண்டினையும் மட்டும் சரி செய்தால் போதும் முகம் நன்றாக அழகாகி பருக்கள் அனைத்தும் நீங்கி விடும். அதனை சரிசெய்வதற்கான யோகாவை பார்க்கலாம்.
வருண முத்திரை:
முதலில் ஒரு விரிக்காயினை விரித்து முதுகு எலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு மூச்சை சாதாரண நிலையில் வைத்து கொண்டு பெருவிரல் மற்றும் சுண்டு விரல் இரண்டினையும் ஒன்றாக இருக்கும்படி வைத்து கொண்டு மற்ற மூன்று விரல்களையும் தரையை நோக்கி இருக்குமாறு வைத்து கொண்டு மூச்சு விடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதுவே வருண முத்திரையாகும்.
இதனை காலை, மதியம் மற்றும் மாலை மூன்று வேலையும் 5 நிமிடம் சாப்பாட்டிற்கு முன்பு செய்தால் முகம் நன்றாக பொலிவு பெரும்.
உத்திர போதி முத்திரை:
இப்போது வழக்கம் போல கண்களை மூடி முதுகு எலும்பு நேராக இருக்கும்படி அமர்ந்து கொண்டு அதன் பிறகு உங்களுடைய இரண்டு கைகளில் உள்ள பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் இரண்டினையும் நேராக வைத்து கொண்டு மற்ற விரல்களை மடித்து வைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு மூன்று முறை மூச்சினை பொறுமையாக உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். இதுவே உத்திர போதி முத்திரை ஆகும்.
இந்த முத்திரையை மூன்று வேலையும் சாப்பிடுவதற்கு முன்பு 5 நிமிடம் செய்தால் போதும் நமது உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் புத்துணர்ச்சியுடன் செயல்படும்.
இதையும் படியுங்கள்⇒ சர்க்கரை நோய் குணமாக இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்கள் போதும்..!
லிங்க முத்திரை:
மூன்றாவதாக செய்யப்போகும் முத்திரை லிங்க முத்திரை ஆகும். வழக்கம் போல் அமர்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு அதன் பிறகு இரண்டு கைகளில் உள்ள அனைத்து விரல்களையும் ஒன்றாக சேர்த்து கொண்டு பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்தி வைத்து கொண்டு பொறுமையாக மூச்சினை உள்ளே இழுத்து வெளியே விட வேண்டும்.
இதனை தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு முன்பு செய்தால் போதும் வெப்பம் அனைத்தும் வெளியேறி முகம் நன்றாக பொலிவுடன் அழகாக ஜொலிஜொலிப்புடன் காணப்படும்.
இதையும் படியுங்கள் 👇 👇 👇 யோகா யாரெல்லாம் செய்ய கூடாது தெரியுமா.?
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |