நரம்பு மண்டலம் பலம்பெற யோகாசனம்..! | Narambu Balam Pera Yoga in Tamil

Advertisement

நரம்பு மண்டலம் வலுப்பெற முத்திரை..! | Narambu Balam Pera in Tamil

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய யோகா பதிவில் நமது உடல் முழுவதும் பின்னி பிணைந்துள்ள நரம்புகள் பலம் பெற சில யோகா முத்திரைகளை பற்றி காணலாம். நமது உடல் முழுவதும் பரவி இருப்பது நரம்பு தான். அப்படிப்பட்ட நமது நரம்பு மணடலம் நன்கு பலம் பெற என்ன செய்ய வேண்டும் என்றால் அதற்கு வலிமை தரக்கூடிய உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் அதற்கு வலிமை தரக்கூடிய உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். சரி வாங்க நமது உடலின் நரம்பு மண்டலம் நன்கு வலுப்பெற யோகா முத்திரைகளை காணலாம்.

நரம்பு மண்டலம் வலுப்பெற முத்திரை:

1. சுப்த வஜ்ஜிராசனம்: 

supta vajrasana yoga in tamil

இந்த முத்திரை செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

அதன் பிறகு தரைவிரிப்பில் முட்டிபோட்டு அமரவும். பின்னர் கால்களை விரித்து பிறகு கால் பாதங்களை கைகளால் பிடித்து கொள்ளவும். அடுத்து உங்கள் முன்கைகளை தரையில் வைத்து பின்னால் மெதுவாக சாயவும். மேலும் நன்றாக சாய்ந்து தரையில் படுக்கவும். இப்பொழுது உங்கள் கைகளை தலைக்கு பின்னால் கொண்டு வந்து வலது தோளை இடது கையாலும் இடது தோளை வலது கையாலும் பிடித்து தரையில் வைக்கவும்.

30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கவும். அதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பவும்.

பலன்கள் :

இந்த சுப்த வஜ்ஜிராசனத்தை தினமும் தொடர்ந்து செய்வதன் மூலம் நமது நரம்பு மண்டலம் நன்கு வலுப்பெறுகிறது. மேலும் இந்த ஆசனம் நுரையீரலையும் பலப்படுத்த உதவுகிறது.

2. வக்கிராசனம்:

how to repair nervous system naturally in tamil

இந்த முத்திரை செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

தரைவிரிப்பில் கால்களை நீட்டி அமரவும். அதன் பிறகு வலது காலை மடித்து பாதத்தை இடது கால் முட்டியின் அருகே வைக்கவும். அடுத்து வலது கையை வலது முதுகிற்கு பின்னால் தரையில் வைக்கவும். இடது கையை வலது முட்டியின் மேல் வழியாக கொண்டு வந்து வலது கணுக்காலை பிடிக்கவும். தலையை திருப்பி முகத்தை வலது தோளுக்கு நேர் மேலே வைக்கவும்.

30 வினாடிகள் இதே நிலையில் இருந்த பின் காலை மாற்றி செய்யவும். அதன் பிறகு இயல்பு நிலைக்கு வரவும்.

பலன்கள் :

இந்த வக்கிராசனத்தை தினமும் தொடர்ந்து செய்வதன் மூலம் நமது நரம்பு மண்டலம் நன்கு வலுப்பெறுகிறது. மேலும் மலச்சிக்கலை போக்க உதவுகிறது. செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது.

நரம்பு தளர்ச்சி குணமாக இந்த ஆசனத்தை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 

 

Advertisement