ஞாபக சக்தியை அதிகரிக்க யோகாசனம் ..! | Memory Power Increase Yoga in Tamil

Advertisement

ஞாபக சக்தியை அதிகரிக்க யோகா..! | Memory Power Increase Yoga in Tamil

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய யோகா பதிவில் நாம் பார்க்க இருப்பது ஞாபக சக்தியை அதிகரிக்க சில யோகாசனம் பற்றி தான்.  இன்றைய காலக்கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்கும் இருக்கின்ற பொதுவான பிரச்சனை என்றால்  ஞாபகமறதி தான். அதனால் நமது ஞாபக சக்தியை அதிகரிக்க ஏற்ற உணவுகளை உட்கொள்வதுடன் இந்த பதிவில் கூறியுள்ள சில யோகா முத்திரைகளையும்  தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். சரி வாங்க  என்ன யோகா முத்திரைகள் அவற்றை எவ்வாறு செய்வது என்பதை பற்றி விரிவாக காணலாம்.

மூளை செல்கள் நன்கு இயங்க யோகாசனம்

Memory Power Increase Yoga in Tamil:

1. அகர்ண தனுராசனம்:

Akarna Dhanurasana benefits in tamil

இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

அதன் பிறகு தரை விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும். அடுத்து இடது கையால் வலது காலின் கட்டை விரலை பிடித்து இழுத்து மார்புக்கு அருகில் அணைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வலது கையால் இடது காலின் கட்டை விரலை பிடிக்க வேண்டும். வலது காலின் விரல்களை இடது பக்க காதிற்கு கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். இதே போல் கால்களை மாற்றி செய்யவும். 

பலன்கள்:

இந்த ஆசனத்தை தினமும் காலையும் மாலையும் 5 – 10 வினாடிகள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவுகின்றது. மேலும் மார்பு பகுதி நன்கு விரிவதால் நுரையீரல் நன்கு செயல்பட உதவிப் புரிகிறது. சுவாச மண்டல பிரச்சனைகள் அனைத்தும் குணமாக உதவுகிறது.

2. பர்வதாசனம்:

parvatha yogam in tamil

 

இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

அதன் பிறகு தரை விரிப்பில் கவிழ்ந்து படுக்கவும். பிறகு கைகளை நெஞ்சருகே பக்க வாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள் இரண்டினையும் தரையில் பதித்த படியே உடலை மேல் நோக்கிய படி முக்கோண வடிவத்தில் உயர்த்தவும். பின்னர் தலையினை இரு கைகளுக்கிடையில் கீழே பார்த்த படியே தொங்க விடவும்.

இப்படியே  20 வினாடிகள் இருந்து பின் நிதானமாக உடலை பழைய கவிழ்ந்த நிலைக்கு கொண்டு வரவும்.

பலன்கள்:

இந்த ஆசனத்தை தினமும் காலையும், மாலையும் 3 முதல் 5 முறை செய்வதன் மூலம் உங்களின் ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகின்றது. தலை, மூளைப்பகுதி, கழுத்து, மார்பு, நுரையீரல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவி புரிகின்றது.

 ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் சீத்தா பழம்

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா 

 

Advertisement